ஜப்பான்: ஃபுகுஷிமா அணு உலை பகுதியை தாக்கிய சுனாமி பேரலை

ஜப்பானின் வட கிழக்கு கடற்கரைக்கு அப்பால் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, ஒரு மீட்டர் உயர அளவு கொண்ட ஒரு சுனாமி பேரலை ஃபுகுஷிமா அணு உலை பகுதியை தாக்கியுள்ளது.

ஃபுகுஷிமா அணு உலை பகுதி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஃபுகுஷிமா அணு உலை பகுதி

கடந்த 2011-ஆம் ஆண்டு, ஒரு பெரிய பேரலையால் ஃபுகுஷிமா அணு உலை பலமான சேதத்துக்குள்ளானது.

இம்முறை ஏற்பட்ட சுனாமி பேரலையால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்படும் வரை, அருகாமையில் உள்ள கார் உற்பத்தி நிறுவனமான நிஸானில் உள்ள எந்திர தொழிற்சாலையில் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டது.

முன்னதாக 6.9 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வு ஜப்பான் தலைநகர் டோக்யோவில் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஃபுகுஷிமா அணு உலைக்கு அப்பால் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.