ஹைட்ரோ ஃபுளூரோ கார்பன் வாயுக்களின் பயன்பாடு தடுப்பு உடன்பாடு - அமெரிக்கா வரவேற்பு

உலக வெப்பமயமாதலுக்கு அதிக பங்களிப்பை வழங்குகின்ற ஹைட்ரோ ஃபுளூரோ கார்பன் வாயுக்களை பயன்படுத்துவதை தடுக்கின்ற உலக ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

குளிர்சாதனப் பெட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகளில் ஹைட்ரோ ஃபுளூரோ கார்பன் பயன்படுத்தப்படுகிறது

குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோ ஃபுளூரோ கார்பன் வாயுக்களை தடுப்பதால், கணிக்கப்பட்டிருக்கும் உலக வெப்பமயமாதலை அரை சென்டிகிரேடு குறைக்க முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி தெரிவித்திருக்கிறார்.

ருவாண்டாவில் நடைபெற்ற கூட்டம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ருவாண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வெற்றிகரமாக இந்த ஒப்பந்தத்தை எட்டினர்

மாற்றங்களை நடைமுறைப்படுத்துவற்கான காலக்கெடு, வளர்ந்து வரும் முக்கிய நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுக்கும் 16 ஆண்டுகள் வழங்கப்பட்டிருப்பதால், இந்த ஒப்பந்தம் எதிர்பார்த்த பலனைத் தராது என்று சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தை ருவாண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் வெற்றிகரமாக எட்டியுள்ளனர்.