அகதி குழந்தைகளின் கல்விக்கு வளர்ந்த நாடுகள் உதவி குறித்து மலாலா கேள்வி
உலகின் பணக்கார நாடுகள், அகதி குழந்தைகளின் கல்விக்கு கணிசமான உதவி தொகை வழங்கவில்லை என நோபல் பரிசு பெற்ற மலாலா யூசெஃப்சாய் குற்றம் சாட்டியுள்ளார்.

பட மூலாதாரம், பிபிசி
இந்த வருடத்தின் தொடக்கத்தில், சிரியாவின் அகதி குழந்தைகளின் கல்விக்கு நிதி வழங்குவதாக லண்டனில் அளிக்கப்பட்ட உறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மலாலா தொண்டு நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்கொடை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நாடுகளின் பாதியளவு பணம் மட்டும்தான் விநியோகிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் அடுத்த வாரம் சந்திக்கவுள்ள உலக தலைவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் குறிப்பாக பெண்கள் கல்வி பெறவும் இந்த அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தாலிபான்களால் சுடப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த மலாலா பெண் கல்வி குறித்து பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








