நூறு வயதைக் கொண்டாடுகிறது இந்திய சினிமா

இந்திய சினிமா நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இந்தியாவில் எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிஷ்சந்திரா 1913ல் வெளியாகியிருந்தது.
இந்தப் படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என்று சொல்லப்படுகின்ற அந்தக் காலத்துக்குரிய விசேடக் காட்சிப்படுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
ஆண்கள், பெண்கள்போல வேடமிட்டு இப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் தனது பயணத்தை தொடங்கியிருந்த இந்திய சினிமா இன்று உலகின் மிகப் பெரிய திரைபடத் துறையாக விளங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும்பல்வேறு மொழிகளிலுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்தியாவில் உருவாகின்றன.
இத்தருணத்தைக் கொண்டாடுவதற்காக, இந்திய சினிமாவின் வண்ணமயமான நூறு ஆண்டு வரலாற்றைப் பிரதிபலிக்கும் விதமாக பல்வேறு ஆவணப்படங்களை இந்திய இயக்குநர்கள் மும்பையில் வெளியிட்டுள்ளனர்.








