You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு
68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.
'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவரான திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு கிடைத்த விண்ணப்பங்கள் மற்றும் நாங்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கையை நினைத்துப்பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மிக கடினமான கொரோனா காலங்களில் இந்த படங்கள் தயாரிக்கப்பட்டன," என்று கூறினார்.
ஃபீச்சர் திரைப்படம் அல்லாத பிரிவுக்கான நடுவர் குழுவுக்கு சித்தார்த்த சிங் தலைமை தாங்கினார். சினிமா குறித்த சிறந்த எழுத்தாளர் என்ற பிரிவுக்கு பத்திரிகையாளர் ஆனந்த் விஜய் தலைமை தாங்கினார்.
விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் அவை தேர்வான பிரிவுகளின் விவரம் கீழே;
சிறந்த நடிகர்சூர்யா (சூரரைப் போற்று - தமிழ்);அஜய் தேவ்கன் (தன்ஹாஜி :தி அன்சாங் வாரியர் - இந்தி)
சிறந்த நடிகைஅபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று - தமிழ்)
சிறந்த திரைக்கதைஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா (சூரரைப் போற்று - தமிழ்) மடோன் அஷ்வின் (மண்டேலா - தமிழ்
சிறந்த துணை நடிகைலட்சுமி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் - தமிழ்);
சிறந்த இயக்குநர்இயக்குநர் ஆர்.வி. ரமணி (ஓ தட்ஸ் பானு - ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி படம்)
சிறந்த ஒளிப்பதிவு: சுப்ரதிம் போல் - அவிஜாத்ரிக் (தி வாண்டர்லஸ்ட் ஆஃப் அபு - பெங்காலி)
சிறந்த பின்னணி பாடகி: நஞ்சம்மா - (ஏ.கே. அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்);
சிறந்த பின்னணி பாடகர்: ராகுல் தேஷ்பாண்டே - (மி வசந்தராவ் நான் வசந்தராவ் - மராத்தி)
சிறந்த குழந்தை கலைஞர்: அனிஷ் மங்கேஷ் கோசாவி - (தக்-தக் - மராத்தி)அகன்ஷா பிங்கிள் & திவ்யேஷ் இந்துல்கர் - (சுமி - மராத்தி)
சிறந்த துணை நடிகர்பிஜு மேனன் - (ஏ.கே. அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்)
சிறந்த தெலுங்கு படம்: கலர் போட்டோ
சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த மலையாள படம்: திங்கலாச்ச நிச்சயம்
சிறந்த மராத்தி படம்: கோஸ்தா ஏகா பைதானிச்சி
சிறந்த கன்னட படம்: டோலு
சிறந்த இந்தி படம்: துளசிதாஸ் ஜூனியர்
சிறந்த பெங்காலி படம்: அவிஜாத்ரிக்
சிறந்த அசாமிய திரைப்படம்: பிரிட்ஜ்
சிறந்த அதிரடி இயக்கத்திற்கான விருது: ஏ.கே.அய்யப்பனும் கோஷியும்
சிறந்த நடன அமைப்பு: நாட்டியம் (தெலுங்கு)
சிறந்த பாடல் வரிகள்: சாய்னா (இந்தி)
சிறந்த இசை இயக்கம்இசையமைப்பாளர் (பாடல்கள்): எஸ். தமன் (ஆலா வைகுந்தபுரமுலு - தெலுங்கு) இசையமைப்பாளர் (பின்னணி இசை): ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று - தமிழ்)
சிறந்த ஒப்பனை கலைஞர்: டி.வி.ராம்பாபு (நாட்டியம் தெலுங்கு படம்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்நச்சிகேத் பார்வே & மகேஷ் ஷெர்லா (தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் - இந்தி படம்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புஅனீஸ் நாடோடி (கப்பேலா (சேப்பல்) மலையாள படம்)
சிறந்த படத்தொகுப்பு: எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்றும் சில பெண்களும் - தமிழ் படம்
சிறந்த ஒலிப்பதிவு: ஜோபின் ஜெயன் (டோலு (கன்னடம்); லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் (ஒத்திசைவு ஒலி படங்களுக்கு மட்டும்)அன்மோல் பாவே (மி வசந்தராவ் ஐ ஆம் வசந்தராவ் (மராத்தி படம்)விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ சங்கர் (மாலிக் - மலையாள படம்; இறுதிக்கலவை டிராக்கின் மறுபதிவு)
நான்-ஃபீச்சர் படங்கள்
சிறந்த குரல் வளம்/ கதை: ஷோபா தரூர் ஸ்ரீனிவாசன், ராப்சோடி ஆஃப் ரெயின்ஸ் - மான்சூன்ஸ் ஆஃப் கேரளா (ஆங்கிலம்)
சிறந்த இசை இயக்கம்: விஷால் பரத்வாஜ் 1232 கிமீ: மாரெங்கே தோ வாஹின் ஜாகர்
சிறந்த படத்தொகுப்பு: பார்டர்லேண்ட்ஸ் படத்திற்காக அனாதி அத்தாலி
சிறந்த ஆன்-லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட்: சந்தீப் பாடி & பிரதீப் லெக்வார், ஜாதுய் ஜங்கல் மேஜிக்கல் ஃபாரஸ்ட்
சிறந்த ஒலிப்பதிவு: அஜித் சிங் ரத்தோர், பாலைவனத்தின் முத்து (ராஜஸ்தானி)
சிறந்த ஒளிப்பதிவு: ஷப்திக்குன்னா கலப்பா படத்திற்காக நிகில் எஸ் பிரவீண்
சிறந்த இயக்கம்: ஓ தட்ஸ் பானு (ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி)
குடும்ப மதிப்புகள் பற்றிய சிறந்த திரைப்படம்: கும்குமார்ச்சன் (வொர்ஷிப் ஆஃப் தி காடெஸ்) (மராத்தி)
சிறந்த குறும்படம்: கச்சிசினித்து
சிறப்பு ஜூரி விருது: அட்மிடெட் படம் (இந்தி மற்றும் ஆங்கிலம்) இயக்குநர்: ஓஜஸ்வீ ஷர்மா
சிறந்த புலனாய்வுத் திரைப்படம்: தி சேவியர்: பிரிக். பிரீதம் சிங் (பஞ்சாபி)
சிறந்த ஆய்வு/சாகசத் திரைப்படம்: வீலிங் தி பால் (ஆங்கிலம் மற்றும் இந்தி)
சிறந்த கல்வித் திரைப்படம்: ட்ரீமிங் ஆஃப் வேர்ட்ஸ் (மலையாளம்)
சமூக பிரச்னைகளுக்கான சிறந்த திரைப்படம்: மந்தீப் செளஹான், இயக்குநர் காமாக்யா நாராயண் சிங் (ஜஸ்டிஸ் டிலேட் பட் டெலிவர்ட் - இந்தி)தயாரிப்பாளர் ரத்னபோலி ராய், இயக்குநர்: புடுல் ராஃபே மஹ்மூத் (த்ரீ சிஸ்டர்ஸ் பெங்காலி படம்)
சிறந்த சுற்றுச்சூழல் படம்தயாரிப்பாளர் மனாஸ் தேசிய பூங்கா மற்றும் ஆரன்யக், இயக்குநர் திப் புயான் (மனா அரு மனு (மனாஸ் அண்ட் பீப்பிள் அசாமி படம்)
சிறந்த விளம்பர திரைப்படம்: சர்மவுண்டிங் சேலஞ்சஸ் (ஆங்கிலம்)
சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திரைப்படங்கள்: ஆன் தி பிரிங்க் சீசன் 2- பேட்ஸ் (ஆங்கிலம்)
சிறந்த கலை மற்றும் கலாசார திரைப்படம்: நாடடா நவநீதா DR PT வெங்கடேஷ்குமார்
சிறந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்: பபுங் சியாம் (மணிப்பூரி)
சிறந்த இனவியல் திரைப்படம்: மண்டல் கே போல் (இந்தி)
ஒரு இயக்குநரின் சிறந்த அறிமுக திரைப்படம்: பரியா (மராத்தி மற்றும் இந்தி)
சிறந்த நான் ஃபீச்சர் படம்: டெஸ்டிமொனி ஆஃப் அனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்