BiggBoss Tamil 4: 'என் பெற்றோர் மதுவிற்கு அடிமை..' கண்ணீர் விட்ட பாலாஜி முருகதாஸ்

பிக் பாஸ் தமிழ் 4-வது சீசன் இந்த முறை 16 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்திய டாஸ்கில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து சக போட்டியாளர்களிடையே பேச வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார்.

அதன்படி 16 போட்டியாளர்களில் அறந்தாங்கி நிஷா, வேல்முருகன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரியெல்லா, ஆரி, ரியோ ராஜ், சுரேஷ் , அனிதா சம்பத், சம்யுக்தா, உள்ளிட்டோர் தாங்கள் வாழ்வில் கடந்து வந்த துயரங்கள் குறித்து பேசினார்கள்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தான் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். "எனது பெற்றோர் சிறு வயதில் பள்ளியில் சேர்த்ததோடு சரி, 12ம் வகுப்பு முடிக்கும் வரை ஒருமுறை கூட எனது பள்ளிக்கு வந்ததில்லை.

நானே தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, சீக்கிரம் பள்ளிக்கு சென்று விடுவேன். காலையில் கஞ்சி சாதம் சாப்பிட்டுவிட்டு செல்வேன். மதியம் எப்போதும் சாப்பாடு வராது. எனக்கு மதியம் சாப்பாட்டைகூட மற்றவர்கள்தான் எப்போதாவது வாங்கி தருவார்கள்.

நான் இரவில் தூங்கிக்கொண்டு இருப்பேன். திடீரென்று தலை வலிக்கும். கண் விழித்துப் பார்த்தால் அப்பா குடித்துவிட்டு, கேஸ் டியூப் வைத்துக்கொண்டு நின்று இருப்பார்.

என்னை அடித்து இருக்கிறார் என்று எனக்கு அப்போதுதான் தெரியும். அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் மதுவிற்கு அடிமையாகி விட்டார். இருவரும் குடித்துவிட்டு தூங்கிவிடுவார்கள். சாப்பாடுகூட இருக்காது. 12ம் வகுப்பு படிக்கும்போது என் அப்பா புக்கை கிழித்துவிட்டார். கோபத்தில் அடித்துவிட்டேன். அப்போது அவர் என்னை தோசை கல்லை கொண்டு அடித்த அடிதான் தற்போது முகத்தில் தழும்பாக இருக்கிறது.

'அதன்பின் ஜிம் சேர்ந்து, சிக்ஸ் பேக் வைத்து, மிஸ்டர் இந்தியா போட்டியில் கஷ்டப்பட்டு ஜெயித்தேன்' என கண்கலங்கி கூறினார். மேலும் உங்களால் குழந்தையை பெற்று வளர்க்க முடியவில்லை என்றால், அதை பெற்றெடுத்து என்ன செய்ய போகிறீர்கள்?" என கூறினார்.

இதனை கேட்ட ரியோ மற்றும் சக போட்டியாளர்கள் ஓடி வந்து பாலாஜியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினர்.

யார் இந்த பாலாஜி முருகதாஸ்?

பாலாஜி முருகதாஸ் தேனியை சேர்ந்தவர். ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அவர் மாடலிங் செய்து கொண்டே மிஸ்டர் இந்தியா போட்டியில் பங்கேற்றார். அவர் 2017ஆம் ஆண்டில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

மாடலிங் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய அவர் பல பட்டங்களை வென்றார். மிஸ்டர் பெர்பெக்ட் பாடி 2017, மிஸ்டர் இந்தியா இன்டர்நேஷனல் 2018, போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களை வென்றுள்ளார்.

மேலும், மனிஷ் மல்ஹோத்ரா போன்ற பேஷன் டிசைனர்களுடன் பணியாற்றியுள்ளார். பாலாஜி முருகதாஸ் டைசன் என்ற ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அது இன்னும் வெளியாகவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: