கொரோனா வைரஸ்: நடிகர் கமல் இல்லத்தில் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' நோட்டீஸ் ஒட்டப்பட்டது ஏன்?

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசனின் இல்லத்தில் கொரோனா தாக்கத்தால் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்ட சிலமணிநேரத்தில் அகற்றப்பட்டது.

நடிகர் கமலின் மகள் சுருதிஹாசன் ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார். தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக சமூகவலைத்தளங்களில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் வசிப்பதாகத் தகவல் வெளியானது.

தற்போது அந்த நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

பிபிசி தமிழிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி, அந்த நோட்டீஸ் தவறுதலாக ஒட்டப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

சென்னையில் சுமார் 24,000 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என்ற தகவலால் ஒட்டப்பட்டிருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆழ்வார்பேட்டை வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக தான் வசிப்பதில்லை என்றும் கட்சியின் அலுவலகமாக அந்த இடம் செயல்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

''நான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த இரண்டு வாரங்களாகத் தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்,''எ அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: