ஆஸ்கர் விருதுக்கு அந்தப் பெயர் வந்தது ஏன் தெரியுமா? - சில சுவாரஸ்ய தகவல்கள்

மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு ஹாலிவுட் வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருது பெற்றதை இந்தியாவே கொண்டாடியது நினைவிருக்கிறதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவில் 92வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.

சரி. ஏன் இந்த விருதுக்கு ஆஸ்கர் என்று பெயரிடப்பட்டது என தெரியுமா?

ஆஸ்கர் விருது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே

  • விருது வழங்கும் அமைப்பிலிருந்த மார்கரெட் ஹெரிக் என்ற பெண் ஒருவர், விருதை பார்த்துவிட்டு அந்த சிலையின் உருவம் தனது மாமா ஆஸ்கர் போல அந்த உருவம் இருப்பதாக கூறினார் என்றும், அதனால்தான் அந்த விருதுக்கு ஆஸ்கர் என பெயரிடப்பட்டது என்றும் ஒரு வதந்தி இருக்கிறது.
  • 1939ஆம் ஆண்டுதான் இந்த விருதிற்கு ஆஸ்கர் விருது என்று பெயரிடப்பட்டது.
  • இந்த விருதிற்கான அதிகாரபூர்வ பெயர் அகாடமி விருது (Academy Award of Merit) என்பதாகும்.
  • பார்க்க பளபளவென இருக்கும் இந்த விருதுகள், உண்மையில் முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. இவை வெண்கலத்தால் செய்யப்பட்டு, 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டவை ஆகும்.
  • இரண்டாம் உலகப் போரின்போது, இந்த விருதுகள் செய்ய போதுமான உலோகம் கிடைக்கவில்லை என்பதால், மூன்று ஆண்டுகளுக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் இந்த விருதுகள் செய்யப்பட்டு வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
  • ஆஸ்கர் விருதுகளை தயாரிப்பது சுலபமானது அல்ல. வெறும் 50 விருதுகளை தயாரிக்க மூன்று மாதங்கள் ஆகும்.
  • இந்த விருது 35 சென்டி மீட்டர் உயரம் கொண்டது. இதன் எடை 4 கிலோ.
  • இந்த விருதின் உருவத்தில் இருக்கும் செய்தி என்ன தெரியுமா? இதில் ஃபிலிம் ரீல் ஒன்று இருக்கும். அந்த ரீலில் ஐந்து ஆரங்கள் இருக்கும். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை அந்த 5 ஆரங்கள் குறிக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: