நேஷனல் ஜியாகிரஃபிக் போட்டி: முதல் பரிசை வென்ற பனி போர்த்திய நகரத்தின் புகைப்படம்

மேற்கு கிரீன்லேண்டில் உள்ள ஒரு தீவில் உள்ள மீனவ கிராமத்தின் புகைப்படம் நேஷனல் ஜியாகிரஃபிக் ட்ராவல் நடத்திய புகைப்பட போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது.

உபர்நேவிகின் எனும் அந்த கிராமம் முழுவதும் பனி படர்ந்திருக்க, தெருவிளக்கிலிருந்து வரும் ஒளி வீதி எங்கும் நிறைந்திருக்க, ஒரு குடும்பம் வெண்மையான அந்த சாலையில் நடந்து செல்ல, ஒருவிதமான உணர்வை பார்வையாளர்களிடம் கடத்துகிறது அந்த புகைப்படம்.

அந்த புகைப்படத்தை எடுத்தது வீய்மின் சூ.

அவர், "விமானம் தரை இறங்கிய போது, காணும் இடம் எங்கும் பனி படர்ந்து இருந்தது. தூரத்தில் ஒளி தெரிந்தது. வெம்மையான புள்ளியாக அந்த கிராமம் இருந்தது. அது என் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருந்தது. இவைதான் என்னை இந்த புகைப்படத்தை எடுக்க தூண்டியது." என்கிறார்.

உபர்நேவிகின் மக்கள் தொகை வெறும் ஆயிரம்தான். மேற்கு க்ரீன்லாந்து பகுதியின் 13வது பெரிய கிராமம் இது.

அந்த கிராமத்தை ஆறு நாட்கள் சுற்றி வந்து இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார் வீய்மின் சூ.

இரண்டாவது பரிசை வென்றவர் ஜாசின் டுடோரோ.

சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையத்தை ட்ரோன் ஷாட்டில் எடுத்துள்ளார்.

ட்ரோன் ஷாட் எடுக்க அனுமதி பெற்று எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்கிறார் டுடோரோ.

அவர், "பெருங்காற்று தினம் அது. அன்று மணிக்கு 35 - 40 மைல் வேகத்தில் காற்று அடித்தது. புகைப்படம் எடுக்கவே மிகவும் சிரமமாக இருந்தது" என்கிறார்.

மூன்றாவது பரிசை வென்றது வங்க தேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

சாண்டிபனி சடபோத்தியாயா எடுத்த புகைப்படம் இது.

வங்கதேச டாக்கா வீதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட அவர்களுக்காக வாகனங்கள் காத்திருக்கின்றன.

சடபோத்தியாயா, "அதிகளவிலான மக்கள் தொழுகை செய்வதற்கான இடம் டாக்காவில் இல்லை. அதனால் டாக்காவின் முக்கிய வீதியான டோங்கியில் மக்கள் தொழுகிறார்கள். அவர்கள் தொழும் நேரத்தில் அந்த வீதியில் வாகனங்கள் இயக்கப்படமாட்டாது." என்கிறார்.

நகரங்கள் பிரிவில் இந்த மூன்று புகைப்படங்களும் வென்றது என்றால், மனித உணர்வுகளை பதிவு செய்த பிரிவில் முதல் பரிசை வென்றது ஹுவாபெங்க் லீ.

சீனாவில் நாடகத்தில் நடிப்பதற்காக தயாராகி கொண்டிருந்த கலைஞர்களின் புகைப்படம் அது.

அறையின் ஜன்னல் வழியாக ஒளி நிறைய, கலைஞர்கள் அரிதாரம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒளியும் நிழலும் நிகழ்த்தும் அற்புதம்தான் அந்த புகைப்படம்.

இரண்டாவது பரிசை வென்றவர் யோஷிகி ஃப்யூஜிவாரா.

மூன்றாவது பரிசை வென்றவர் ஜோஷ் அந்தோணியோ ஜமாரோ.

இந்த பிரிவில் சிறப்புப் பரிசை வென்றவர் நவீன் வட்ஸா.

இயற்கை பிரிவில் முதல் பரிசை வென்றவர் டமாரா.

அவர் எடுத்த கழுகின் புகைப்படம் இந்த பரிசை வென்றது.

இரண்டாவது பரிசை வென்றது ஒரு பேரலையின் புகைப்படம். ஓர் அலை எழும் சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. எடுத்தவர் டேனி செப்கோவிஸ்கி.

மூன்றாவது பரிசை வென்றவர் ஸ்காட் போர்டலி எடுத்த புகைப்படம். கறுப்பு வெள்ளையில் அந்த டால்பின்னின் புகைப்படத்தை ஸ்காட் எடுத்திருப்பார்.

இந்தப் பிரிவில் சிறப்பு பரிசை வென்றவர் ஜோனஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :