You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புகைப்படக் கலையில் சாதிக்க துடிப்பவரா நீங்கள்? பிபிசி தமிழ் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு!
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
ஒவ்வொரு வாரமும் பிபிசி தமிழ் இணையதளத்தில் புகைப்படத்துக்கான தலைப்பு கொடுக்கப்படும். அந்த தலைப்பிற்கு தொடர்புடைய வகையில் நீங்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்குள் புகைப்படத்தை அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படங்கள் ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழ் இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும்.
தலைப்புக்கு தகுந்த புகைப்படங்ளை எடுத்து அனுப்ப வேண்டும். ஒருவர் தான் எடுத்த புகைப்படங்களில் சிறந்த ஒரு புகைப்படத்தை மட்டும் அனுப்பவேண்டும்.
மின்னஞ்சல் அனுப்பும்போது உங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, சமூக வலைதள முகவரி, புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படம் குறித்த சிறிய விளக்கம் உள்ளிட்டவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும். தேவைப்பட்டால் பிபிசி தமிழில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்வார்கள்.
புகைப்படங்கள் கேமரா மூலம் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறன்பேசிகளில், டேப்லெட்டில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். ஆனால், அவை நீங்கள் எடுத்த புகைப்படங்களாக இருக்க வேண்டியது அவசியம்.
மற்றவர் எடுத்த புகைப்படங்களை, வேறொரு இணையதளத்தில் வெளியான புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.
மேலும், புகைப்படத்தில் இடம்பெறும் மூன்றாம் நபர்களின் அனுமதியை பெற்று படங்களை எடுக்க வேண்டும்.
புகைப்படங்களை அனுப்பும்போது 'வாட்டர் மார்க்' அல்லது உங்களது நிறுவனம் அல்லது தனிநபர் குறித்த குறியீடுகள் இல்லாமல் அனுப்ப வேண்டும்.
இதுகுறித்து மேலதிக தகவலை தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் இணையதளம், பிபிசி தமிழ் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்த வாரத் தலைப்பு
18 ஆவது வார புகைப்படப் போட்டிக்கான கரு: 'பிரதிபலிப்பு'
இயற்கை மற்றும் பிற பொருட்களின் வடிவங்கள் ஒரு அழகென்றால் அவற்றின் வண்ணமயமான பிரதிபலிப்பு இன்னொரு அழகு.பிரதிபலிப்புகள் அழகுடன் சேர்த்து கூடுதல் அர்த்தங்களையும் தர வல்லவை.சில நேரங்களில் உண்மையான உருவங்களைவிட அவற்றின் பிரதிபலிப்பு கண்களை மட்டுமல்லாது மனதையும் மயக்கும் தன்மையுடன் இருக்கும். அந்த பிரதிபலிப்புகளை உங்கள் கேமரா லென்சுகளின் மூலம் புகைப்படங்களாக மாற்ற முடியுமா?
மின்னஞ்சல் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: bbctamizhosai@gmail.com
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்