டிரம்பின் கருத்துக்கு எதிராக கொதித்தெழுந்த விளையாட்டு வீரர்கள்

விளையாட்டு வீரர்களை விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விளையாட்டு உலகில் இருந்து மேலும் கண்டனங்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது போராட்டம் நடத்திய வீரர்களை தேசிய கால்பந்து லீக் (என்எஃப்எல்) நீக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, உயர்மட்ட கால்பந்து வீரர்கள் மற்றும் கூடைப்பந்து நட்சத்திரமான லெப்ரோன் ஜேம்ஸ் ஆகியோர் டிரம்ப்பிற்கு எதிராக வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு என்எஃப்எல் (NFL) குழு உரிமையாளர், டிரம்ப்பின் கருத்துக்கள் "தீங்கு விளைவிக்கக்கூடியது'' என்று கூறினார். ஆனால், டிரம்ப் தனது விமர்சனத்தை மீண்டும் தொடர்ந்தார்.

டிரம்ப் என்ன சொன்னார்?

கடந்த ஆண்டு, வீரர் கொலின் கேப்பர்னிக் துவங்கிய இன உறவுகளின் மீதான எதிர்ப்புக்களின் சரத்தை கருத்தில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு ஒரு பேரணியில் பேசிய டிரம்ப், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட என்எஃப்எல் வீரர்களை தங்கள் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.

"இந்த என்எஃப்எல் உரிமையாளர்களில் ஒருவரைக் காண விரும்புகிறீர்களா? யாரோ ஒருவர் நமது தேசிய கொடியை மதிக்காதபோது, அவரை உடனே பணிநீக்கம் செய்யவேண்டும் அல்லவா?'' என்று டிரம்ப் அந்த கூட்டத்தில் பேசினார்.

என்எஃப்எல்வீரர்கள் எவ்வாறு பதிலளித்தனர்?

என்எஃப்எல் கமிஷனர் ரோஜர் குட்டெல் ஒரு அறிக்கையை வெளியிட்டார், "இதுபோன்ற பிளவுபடுத்தும் கருத்துக்கள், துரதிருஷ்டவசமான அவமரியாதையை காட்டுகின்றன.

என்எஃப்எல் வீரர்கள் சங்கம், அதிபர் டிரம்ப் ''வாயைமூடி விளையாடவும்'' என்று வீரர்களை நோக்கி கூறியதன் மூலம், தனது எல்லையைக் கடந்துவிட்டதாக என்எஃப்எல் வீரர்கள் சங்கம் கூறியது.

இந்த விமர்சனத்தில் வேறு யார் இணைந்தனர்?

சனிக்கிழமை இரவு, ஓக்லாண்ட் தடகள வீரர், புரூஸ் மேக்ஸ்வெல், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, எதிர்த்து முழங்கிய முதல் மேஜர் லீக் பேஸ்பால் வீரர் ஆவார்.

கூடைப்பந்து சாம்பியன்களான தி கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியிருக்கு, வெள்ளை மாளிகைக்கு வர விடுத்திருந்த அழைப்பை, ஸ்டீபன் கர்ரி என்ற ஒரு வீரர்,தனக்கு வர விருப்பமில்லை என்று கூறியதை அடுத்து,அதிபர் டிரம்ப் பின்வாங்கினார்.

தி கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ், இதற்கிடையில், "வெள்ளை மாளிகைக்கு நாங்கள் அழைக்கப்படுவதில்லை" என்று தெளிவாக புரிந்து கொண்டதாகக் கூறியது. ஆனால் சமத்துவம், பன்முகத்தன்மை,ஒற்றுமையை கொண்டாடுவதற்கு, வாஷிங்டன் டி.சிக்கு தங்கள் சொந்த முயற்சியில் செல்ல வேண்டும் என்றும் அது கூறியது.

என்பிஏ ஆணையர் ஆடம் சில்வர், தி கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணி வெள்ளை மாளிகைக்கு செல்ல முடியாமல் போனது தனக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாகவும், ஆனால் வீரர்கள் வெளிப்படையாக பேசியது "பெருமை" அளித்துள்ளது என்றும் கூறினார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :