சிங்கப்பூரில் ஸ்டாலின்: கருணாநிதி போல சாதிப்பாரா? தமிழர்கள் அடுக்கும் நீண்டகால எதிர்பார்ப்புகள்

ஸ்டாலின்

ஒன்பது நாள் அதிகாரபூர்வ பயணமாக சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குள்ள முப்பது அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்வில் அவர் இன்று மாலையில் அவர் கலந்து கொண்டார். சுமார் அறுபது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் சிங்கப்பூர் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. ரவீந்திரன், நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் ஆகியோரின் முயற்சியில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்டாலின்

தமிழக முதல்வரின் இந்த அதிகாரபூர்வ பயணத்துக்கான முன்னேற்பாடுகளை கவனிக்க தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடந்த திங்கட்கிழமையே சிங்கப்பூருக்கு வந்து விட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பிறகு முதல்வரும், அமைச்சர் ராஜாவும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையின் (சிக்கி) தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டிலும் இன்று கலந்து கொண்ட தொழிற்துறை நிபுணர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.

இம்மாநாட்டில் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஈஸ்வரன், இந்திய தூதர் பெரியசாமி குமரன், சிக்கி அமைப்பின் தலைவர் நீல் பரேக் ஆகியோரும் பங்கேற்றனர்.

சிங்கப்பூரில் ஸ்டாலின்
படக்குறிப்பு, இறை. மதியழகன்

முன்னதாக, சிங்கப்பூர் சன்டெக் மாநாட்டு மையத்தில் தமிழர் அமைப்புகள் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் இறை. மதியழகன், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, அவருக்கு முன்பாக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஆகியோரின் காலந்தொட்டு வருகை தரும் முதல்வர்களை ஒன்று கூடி முறையாக வரவேற்பதில் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அக்கறை கொண்டிருப்பதாக நினைவுகூர்ந்தார்.

"இதற்கு முன்பு காலஞ்சென்ற தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, அவரை அடுத்து கலைஞர் கருணாநிதி ஆகியோர் சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ளனர். அப்போது இருவருக்குமே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

"1998இல் கலைஞர் கருணாநிதிக்கு சிங்கப்பூரில் உள்ள சில தமிழர் அமைப்புகள் இணைந்து வரவேற்பு அளித்தன. இம்முறை முதல்வர் ஸ்டாலினுக்கு முப்பது தமிழர் அமைப்புகள் மற்றும் கூடுதலாக 60 அமைப்புகள் இணைந்து வரவேற்பு அளித்தன. இது போன்ற பெரும் எண்ணிக்கையில் அமைப்புகள் ஒன்று திரள்வது சிங்கப்பூரில் முதல் முறை. இது இங்கு தமிழர்கள் தமிழ் மொழி சார்ந்த முயற்சிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் ஒற்றுமையோடு இணங்கி இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிற நிகழ்வாக இந்த நிகழ்வு இருப்பது மகிழ்ச்சியான ஒன்று," என்கிறார் இறை. மதியழகன்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலையில் சிங்கப்பூர் வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவர் பல்வேறு முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கத் தொடங்கினார்.

அவர் தங்கியுள்ள தங்கு விடுதி முன்பு கணிசமான எண்ணிக்கையிலான சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் திரண்டிருப்பதை காண முடிகிறது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

"வேண்டும் உலகத் தமிழர் வங்கி"

ஸ்டாலின்

இந்த நிலையில், தங்கள் நாட்டுக்கு வந்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தங்களுக்குள்ள எதிர்பார்ப்புகள் குறித்து சிங்கப்பூர் தமிழர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் பரவி உள்ள தமிழர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் உலகத் தமிழர் வங்கியை உருவாக்குவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்ட வேண்டும் என்கிறார் சிங்கப்பூரில் புத்தாக்க தொழில்வளர்ச்சித்துறை நிபுணராக உள்ள ஹபீப் முஹமத் மரைக்கார்.

சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்பங்களை தமிழகத்துக்குக் கொண்டு செல்வதில் தாம் ஆர்வமாக இருப்பதாகவும் தமிழகத்துடனான சிங்கப்பூர் தமிழர்களின் தொடர்புகளை வலுப்படுத்த தமிழக அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் ஹபீப் முஹமத் கூறுகிறார்.

ஸ்டாலின்
படக்குறிப்பு, ஹபீப் முஹமத்

"சிங்கப்பர் தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், எங்களைப் போன்ற பலரும்கூட தமிழகத்தில் முதலீடுகளை செய்ய ஆர்வமாக உள்ளோம். இதற்கு உதவி புரியும் வகையில், உலக தமிழர்களை பொருளாதார ரீதியாக இணைக்கும் வகையில், 'உலக தமிழர் வங்கி' தொடங்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

"இதன் மூலம் லட்சக்கணக்கான தமிழர்கள் பலன் அடைவார்கள். மேலும் தமிழ்ச் சமுதாயம் பொருளாதார ரீதியில் வலுவடையும்," என்கிறார் ஹபீப் முஹமத் மரைக்கார்.

முதல்வர் ஸ்டாலின் வருகை சிங்கப்பூர் தமிழர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

ஸ்டாலின்

உலகெங்கிலும் உள்ள தமிழ்ச்சமூகத்துக்கு எண்ணற்ற பணிகளை ஆற்றியுள்ள கலைஞர் கருணாநிதியின் வாரிசான, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய வருகையும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களை உற்சாகப்படுத்தி உள்ளது என்கிறார் சிங்கப்பூரில் உணவகம் நடத்தி வரும் பனசை நடராஜன்.

ஸ்டாலின்
படக்குறிப்பு, பனசை நடராஜன்

"பல ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி சிங்கப்பபூருக்கு வருகை தந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் தமிழர்கள் அவர் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் வைத்துள்ளனர்.

"கடல்கடந்து சிங்கபூரில் நிரந்தரமாகாக் குடியேறிவிட்டபோதிலும் தாய்த் தமிழகத்துடனான எங்களுடைய தொப்புள் கொடி உறவு நீடிக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பூருக்கு வருகை தருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

"சிங்கப்பூர் மட்டுமல்லாமல், மலேசியா, இலங்கை என்று பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்கள், கொள்கைகளை உருவாக்கி வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் பனசை நடராஜன்.

"எதிர்பார்ப்புகள் நிறைவேற காத்திருக்கிறோம்"

ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் இன்பா.

அதேபோல் மகளிர்க்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடுகிறார்.

"கடந்த ஜனவரி மாதம் அயலகத் தமிழர் தினத்தையொட்டி தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது. அவை எப்போது முழுமையாக நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அயலகத் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

சிங்கப்பூரில் ஸ்டாலின்
படக்குறிப்பு, இன்பா

"அயலகப் படைப்பாளர்கள், சான்றோர்களை அங்கீகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன.

"வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் பெண் முதலீட்டாளர்களுக்கு என தனிச்சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

"தமிழக முதல்வரின் சிங்கப்பூர் பயணத்தையொட்டி முக்கிய அறிவிப்புகள் வெளிவருமா எனத் தெரியவில்லை. அதற்காகக் காத்திருப்போம்," என்கிறார் இன்பா.

தந்தையைப் போல் மகனும் சாதிப்பார்

தன் தந்தையைப் போல் இருமடங்கு சாதிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புவது தெரிகிறது என்றும் முதல்வரின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதே என்னைப் போன்ற எண்ணற்ற தமிழர்களின் விருப்பமாக இருக்கும் என்றும் சொல்கிறார் தனியார் நிறுவன மேற்பார்வையாளரான சடையப்பன்.

ஸ்டாலின்
படக்குறிப்பு, சடையப்பன்

"சிங்கப்பூரில் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது. நன்றாக உழைத்தால் நன்கு சம்பாதித்து நிம்மதியாக வாழலாம்.

தமிழக முதல்வருக்கு இங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக சோஷியல் மீடியாவில் படித்தேன். சிங்கப்பூர் தொழிலதிபர்களை சந்தித்து பெரிய முதலீடுகளைப் பெற அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அறிந்தேன்.

சிங்கப்பூர் அமைச்சர்களை தமிழக முதல்வர் சந்திப்பதும், தமிழகத்துக்கான முதலீடுகளைப் பெற இருப்பதும் பெருமைக்குரிய விஷயம்," என்கிறார் சடையப்பன்.

"அனைத்துலக பொருளாதார மையமாக திகழும் சிங்கப்பூர்"

ஸ்டாலின்

தமிழகத்தில் தொழில்துறையுடன் தொடர்புடைய வாய்ப்புகளும் வளங்களும் நிறைந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

அத்தகையை சூழல் நிலவுவதை முதலீட்டாளர்கள் விரிவாக அறிவது இன்றிமையாதது என்றும் அடுத்த மூன்று மாதங்களில் இது சாத்தியமாகும் என்றும் சிங்கப்பூர் தமிழ் முரசு ஊடகத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

பன்முகத்தன்மை வாய்ந்த முதலீடுகளை ஈர்ப்பது, நீண்டகால நிலைத்தன்மை கொண்ட வேலைவாய்ப்புகளைப் பல தரப்பினருக்கும் ஏற்படுத்துவது எனும் இலக்குகளுடன் தமது அமைச்சு செயல்படுவதாகவும் அமைச்சர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

நீடித்த நிலைத்தன்மையை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்லும் அனைத்து முயற்சிகளையும் தமிழகம் ஆதரிக்கும் என்றும், அத்தகைய ஆர்வத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் நுழைவாயிலாக தமிழகம் விளங்குவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அனைத்துலக பொருளாதார மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கப்பூரும் இந்தியாவும் நீண்டகால நட்பு நாடுகள் என்றும் பொருளாதாரம், தொழில்துறை ஆகியவற்றில் நல்லுறவுகளைக் கொண்டுள்ளன என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: