செங்கோலை நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர் மோதி - எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணிக்க முடிவு

பட மூலாதாரம், ANI
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா காண கோலாகலமாக தயாராகி வருகிறது. திறப்பு விழாவின் போது நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை பிரதமர் மோதி நிறுவுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல என்று விமர்சித்து, திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்பதும் அக்கட்சிகள் முன்வைக்கும் கேள்வி.
பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் நூற்றாண்டை நெருங்கும் நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோதி அடிக்கல் நாட்டினார். இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவை 300 உறுப்பினர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி திறந்துவைப்பார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்ததுமே, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது. குறிப்பாக, கர்நாடக தேர்தல் வெற்றியால் புது உத்வேகம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்தது. "நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல" என்று ராகுல் காந்தி ட்வீட் செய்தார்.
அவரது கருத்தை ஆமோதித்த, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், திறப்பு விழாவுக்கு சாவர்க்கர் பிறந்தநாளான மே 28-ம் தேதியை தேர்வு செய்ததையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 28-ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று முறைப்படி அறிவித்தார்.
அத்துடன், சுதந்திரத்தின் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக பிரிட்டிஷாரிடம் இருந்து நேரு பெற்றுக் கொண்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படும் என்று அவர் தெரிவித்தார். மக்களவை சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார் என்றும் அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டாக அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அக்கட்சிகள் சார்பில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
"ஒன்றியத்திற்கு நாடாளுமன்றம் இருக்கும். அந்த நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை, மக்களவை என்ற இரு அவைகளைக் கொண்டிருக்கும் என்று இந்திய அரசியல் சாசனத்தில் 79-வது பிரிவு கூறுகிறது. அதன்படி பார்த்தால், குடியரசுத் தலைவர் என்பவர் நாட்டின் தலைவர் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமும் ஆவார். குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் இயங்க முடியாது. ஆனாலும், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இல்லாமலேயே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இந்த கண்ணியமற்ற நடத்தை குடியரசுத் தலைவரை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசன வரிகளை மீறுகிறது.
ஜனநாயகத்தின் ஆன்மா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட போது, புதிய கட்டடத்திற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை பார்க்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதில்லை என்ற எங்களது கூட்டு முடிவை இதன் மூலம் அறிவிக்கிறோம்" என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
காங்கிரசுடன் ஓரணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ்
கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் டெல்லியில் வேகமாக மாறும் அரசியல் காட்சிகளின் நீட்சி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழா விவகாரத்திலும் பிரதிபலிக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான தேசிய அரசியலில் காங்கிரசுடன் சேராமல் விலகியே நின்ற ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரசும் இம்முறை சத்தமின்றி ஒரே அணியில் இணைந்துள்ளன. திமுக, வி.சி.க., மதிமுக, சிவசேனா, சமாஜ்வாதி, மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் என 19 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளன.
எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. புறக்கணித்தலும், புதுப்புது பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்து, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
தற்போதைய நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளை மீறி வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா காண்பது உறுதியாகிவிட்டது.
பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெறும் நிகழ்வில் இடம்பிடித்த சோழர் கால செங்கோல், இந்திய ஜனநாயகத்தின் அடுத்தக்கட்ட வரலாற்று நிகழ்விலும் இடம் பிடிக்கிறது. அத்துடன் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிரந்தரமாக வீற்றிருக்கவும் போகிறது.
சோழர் கால செங்கோலின் சிறப்பு

பட மூலாதாரம், ANI
- செங்கோல் என்ற சொல் தமிழில் செம்மை என்ற சொல்லில் இருந்து தருவிக்கப்பட்டது. இதற்கு நேர்மை என்று பொருள்.
- இந்த செங்கோலின் உச்சியில் கம்பீரமான பார்வையைக் கொண்ட புனிதமாக நந்தி இருக்கும்.
- இந்திய துணைக்கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக நீடித்த பேரரசுகளில் முதன்மையாக திகழ்ந்த, தமிழ் மண்ணை மையமாகக் கொண்ட சோழப் பேரரசில் ஆட்சியாளர் அதாவது வழிவழியாக மன்னர்கள் மாறும் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக கடைபிடிக்கப்பட்ட பாரம்பரிய வழிமுறை இது.
- ஆட்சி பீடம் ஏறும் போது பாரம்பரிய குருவோ அல்லது முன்பு ஆட்சியில் இருந்த மன்னனோ புதிய ஆட்சியாளரிடம் செங்கோலை ஒப்படைப்பார்.
- செங்கோலைப் பெறுபவர் நியாயமாகவும், நடுநிலையுடனும் ஆட்சி புரிவதற்கான ஆணையைப் பெறுகிறார்.
- கடைசியாக சொல்லப்பட்டதுதான் முக்கிய விஷயம். மக்களுக்கு சேவை புரிவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இதனை மறக்கவே கூடாது.
1947-ல் நேருவிடம் செங்கோல் ஒப்படைப்பு
- இந்தியா விடுதலை பெற்ற போது, பிரிட்டிஷாரிடம் இருந்து ஆட்சி கைமாறியதைக் குறிக்கும் வகையில், இந்த சோழர் கால நடைமுறை பின்பற்றப்பட்டது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை மடாதிபதி செங்கோலை மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து பின் அவரே வாங்கிக் கொண்டார்.
- அந்த செங்கோல் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
- 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவில் ஜவஹர்லால் நேருவிடம் கொடுப்பதற்காக அவரது இல்லத்தை நோக்கி செங்கோல் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டது.
- சோழர் கால பாரம்பரிய முறைப்படி, ஓதுவார் தேவாரத் தொகுப்பில் இருந்து கோளறு பதிகத்தின் 11-வது வரியான "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்று பாடி திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான் ஸ்வாமிகள் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை நேருவிடம் ஒப்படைத்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












