"பெண்களுக்கு பாதுகாப்பில்லை" என பதிவிட்டு பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்

பட மூலாதாரம், Gayathri Raguramm/Twitter
தமிழ்நாடு பா.ஜ.கவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக முன்பு பதவி வகித்த காயத்ரி ரகுராம், தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டையையும் தனது சமூக வலைதள பக்கத்தில் முன் வைத்துள்ளார்.
காயத்ரி ரகுராமின் பதிவு
"பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன்," என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம். மேலும் தனது டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக உள்ள அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணைக்கு பாஜகவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றும் பதிவிட்டுள்ளார், காயத்ரி ரகுராம். அவரது டிவிட்டர் பதிவில், "பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. மேலும் உண்மையான பாஜக தொண்டர்களை கட்சியில் இருந்து விரட்டுவது மட்டுமே அண்ணாமலையின் ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த இந்த முடிவுக்கு அண்ணாமலை தான் காரணம்," என குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அண்ணாமலையை, "அதர்ம தலைவர் என்றும் மலிவான பொய்களை கூறும் தந்திரக்காரர்," என்று தனது டிவிட்டர் பதிவில் காயத்ரி குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையிடம் இருந்து சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. பாஜகவில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், யாரும் உங்களை வந்து காப்பாற்றுவார்கள் என நம்பி இருக்க வேண்டாம் எனவும் காயத்ரி ரகுராம் பதிவிட்டு இருக்கிறார். தேவை ஏற்பட்டால் தன்னிடம் இருக்கும் வீடியோக்களையும், ஆடியோக்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்து புகார் தர தயாராக உள்ளதாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராமின் இந்த பதிவு குறித்து அண்ணாமலை இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ராஜினாமாவின் பின்னணி?

பட மூலாதாரம், annamalai_k/twitter
பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் செயலாளராக முன்பு இருந்த திருச்சி சூர்யா சிவா, அந்த கட்சியின் சிறுபான்மை பிரிவின் செயலாளராக இருக்கும் டெய்சி என்பவரிடம் போனில் பேசிய உரையாடல் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இந்த உரையாடலில் திருச்சி சிவா பேசிய கருத்துக்கள் தொடர்பாக, தனது கண்டனத்தை காயத்ரி ரகுராம் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து காய்த்ரி ராகுராம், கட்சியின் கட்சிக்கு களங்கம் தெரிவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி அவரை 6 மாத காலத்திற்கு கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருந்தார். "He Always wanted me out," என அப்போது ட்விட்டரில் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். ஆனால் யாரை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார் என காயத்ரி ரகுராம் அப்போது கூற மறுத்துவிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








