டி20 உலக கோப்பை: இது 1992 ஸ்கிரிப்ட்டா, 2007 ஸ்கிரிப்ட்டா? வைரல் ஆகும் மீம்ஸ்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
அது அக்டோபர் 27-ம் தேதி, பெர்த் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியும் பாகிஸ்தான் அணியும் விளையாடிக் கொண்டிருந்தன.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தன.
டி20 ஃபார்மெட்டில் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் அடிப்பது ஒன்றும் அத்தனை கடினமான காரியம் அல்ல தான்.
ஆனால் அந்த மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்தது பாபர் ஆஸம் அணி. அதுதான் பாகிஸ்தான்.
எளிதில் வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் போட்டியில் தோற்பதும், நம்பவே முடியாத வகையில் ஒரு மிரட்டல் 'கம்பேக்' கொடுப்பதும் பாகிஸ்தான் அணியின் தனித்துவமான பாணி.
தனது ஸ்டெயிலில் இதோ இன்னொருமுறை இறுதிப்போட்டி வரை வந்துவிட்டது பாகிஸ்தான் .
விராட் கோலியின் விடாப்பிடியான போராட்டத்தால் கடைசி மூன்று ஓவர்களில் கோட்டைவிட்ட பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணியுடன் தோல்வியடைந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் லாஹூருக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான் என விமர்சனங்கள் குவிந்தன.
ஆனால், இந்தியாவை வீழ்த்தியிருந்த தென் ஆப்பிரிக்காவை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு நேர்த்தியாக விளையாடி அநாயசமாக வீழ்த்தியது பாகிஸ்தான்.
பின்னர் நெதர்லாந்து அணி தென்னாப்ரிக்காவின் பேட்ஸ்மேன்களை ஒவ்வொருவராக வீழ்த்தும்போதெல்லாம் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
இறுதியில் நெதர்லாந்து தென்னாப்ரிக்காவையும் கையோடு ஆஸ்திரலியாவில் இருந்து கூட்டிச் செல்ல, வங்கதேசத்துடனான போட்டியில் கவனமாக விளையாடி அரைஇறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதியில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் எதிர்கொண்ட விதம் அபாரம். பந்துவீச்சோ, ஃபீலடிங்கோ, பேட்டிங்கோ எல்லாவற்றிலும் டாப் கிளாஸ்.
வெற்றி வாய்ப்பை சிந்தாமல் சிதறாமல் மிக நேர்த்தியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
"ஏ..எப்பர்ரா பாகிஸ்தான் ஃபைனலுக்கு வந்துச்சு" என மீம்ஸ் பறக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அதில் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது 1992 உலக கோப்பை மற்றும் 2007 உலகக்கோப்பை.
இது ஒருபுறமிருக்க, நாளைய தினம் இந்தியா இங்கிலாந்து அணிகள் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவதால் இந்திய ரசிகர்கள் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்றில் நான்கு போட்டிகளில் வென்ற ஒரே அணி இந்தியா மட்டும்தான்.
அயர்லாந்திடம் தோல்வியடைந்த இங்கிலாந்து ஒருவழியாக நியூசிலாந்து, இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி ரன்ரேட் உதவியால் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நாளைய தினம் இந்தியா இங்கிலாந்து அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.
இதற்கிடையில் தான் இது அந்த உலகக்கோப்பை தொடரின் முடிவை ஒத்ததாய் இருக்கிறது, இது இந்த உலகக்கோப்பை தொடரின் முடிவை ஒத்ததாய் இருக்கிறது என ட்வீட், மீம்ஸ் எல்லாம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
1992 ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் அரை இறுதியில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆஃப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இதில் அரை இறுதியில் பாகிஸ்தான் நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் சேஸிங்கில் வென்றது. இந்த முறையும் அரை இறுதியில் சேஸிங்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது.
அந்த உலக கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்த உலகக்கோப்பை தொடரும் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற்று வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
1992 உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இம்முறையும் இறுதிப்போட்டி மெல்போர்னில் தான் நடக்கிறது.
1992 இறுதி போட்டியில் பாகிஸ்தானும் இங்கிலாந்து அணிகளும் மோதின.
அதில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆனது.
இந்த முறை இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிபோட்டிக்கு வரும்.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆகும் என பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இன்னொருபுறம் இது 2007 உலகக்கோப்பை ஸ்க்ரிப்ட் என ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
2007 டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
அதன்பின்னர் இன்றுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மோதியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இரண்டு முறை டி 20 உலக கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன. அதில் இந்த அணிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளன.
2007 மற்றும் 2014 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்தியா விளையாடியது. 2007 மற்றும் 2009 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடியது. இங்கிலாந்து அணி 2010 மற்றும் 2016 உலக கோப்பைகளில் இறுதிப்போட்டிகளில் விளையாடியது.
இதோ பாகிஸ்தான் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விட்டது. அந்த அணியை எதிர்கொள்ளப்போவது இந்தியாவா, இங்கிலாந்தா என்பதை அறிய நாளை மாலை வரை காத்திருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












