பிபிசி நியூஸ் தமிழ் - நியூஸ்லெட்டர் தனியுரிமை அறிவிப்பு

பிபிசி நியூஸ் தமிழ் நியூஸ்லெட்டர் - தனியுரிமை அறிவிப்பு
உங்களது நம்பிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, உங்களது தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க பிபிசி கடமைப்பட்டுள்ளது. இத்தகைய தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எப்படி, ஏன் பாதுகாக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள இதை நீங்கள் படிக்க வேண்டியது முக்கியம். எங்களோடு தொடர்பில் இருக்கும்போதும், அதற்குப் பிறகும் உங்களது தனிப்பட்ட தரவுகளை, அதற்குரிய தரவுகள் பாதுகாப்புச் சட்டப்படி எப்படி சேகரிக்கிறோம் என்பதை இந்த தனியுரிமை அறிவிப்பு விளக்குகிறது.
பிபிசி நியூஸ் தமிழ் நியூஸ்லெட்டர் பற்றி
ஏராளமான தகவல்களால் நிரம்பியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், எங்களது நியூஸ்லெட்டரின் நோக்கம் மிகவும் தெளிவானது: உங்களுக்கு மிகவும் தேவையான கட்டுரைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பெருத்த ஓசைகளுக்கு மத்தியில் உங்களுக்கு சிறந்த கட்டுரைகள், சிறப்பு நேர்காணல்கள் மற்றும் சிறந்த வீடியோக்களை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்போம். உங்களுக்கு தகவல்களை சொல்வது மட்டுமன்றி, ஏன் சொல்கிறோம் என்பதையும் விளக்கி, நாம் வாழும் இந்த உலகைப் பற்றி பல புதிய தகவல்களை சொல்வதே எங்கள் நோக்கம்.
எத்தகைய தனிப்பட்ட தரவுகளை பிபிசி சேகரிக்கும்?
இந்த நியுஸ்லெட்டரை பெற்றுக்கொள்ள பதிவு செய்வதற்க, நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.
உங்களைப் பற்றி கீழ்க்கண்ட தனிப்பட்ட தரவுகளை பிபிசி சேகரிக்கும்
- பெயர்
- இ-மெயில் முகவரி
தரவுகளைக் கையாள்வது யார்?
உங்களது தனிப்பட்ட தரவுகளைக் கையாள்வது பிபிசி. அதாவது, உங்களது தனிப்பட்ட எந்த தரவுகளைப் பயன்படுத்துவது, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பிபிசி முடிவு செய்யும். சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக, இந்த தனியுரிமை அறிவிப்பில் குறிப்பிட்ட விடயங்களுக்காக மட்டுமே உங்களது தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படும். தரவுகளைக் கையாள்பவர் என்ற வகையில், தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்று, அதன்படி செயல்படும் பொறுப்பு பிபிசி-க்கு உள்ளது.
சட்ட விதிகளின்படி உங்கள் தனிப்பட்ட தரவுகளைக் கையாள்வது
சட்ட விதிகளின்படி, பிபிசி உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவதற்கு உங்கள் ஒப்புதல் தேவை. ஒரு இ-மெயில் வழியாக, நியுஸ்லெட்டருக்கான உங்களது பதிவை திரும்பப் பெற்றுக்கொள்வதன் மூலம், உங்களது ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெற முடியும்.
உங்களது தனிப்பட்ட தரவுகளைப் பகிர்தல்
நாம் சில சேவைகளை வழங்குவதற்கு, மாற்று நிறுவனங்களுடன் இணைந்து பிபிசி செயல்படுகிறது. இந்த நிறுவனங்கள், பிபிசியின் ஒப்புதலுடன்தான் உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும். பிபிசியின் அனுமதியின்றி, சுயாதீனமாகப் பயன்படுத்தாது.
தேவைப்படும் இடத்திலோ அல்லது சட்டப்படியோ, உங்களது தனிப்பட்ட தரவுகளை மாற்று நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
நீங்கள் பிபிசி தமிழ் நியுஸ்லெட்டரைப் பெற பதிவு செய்துகொண்டால், உங்களது தனிப்பட்ட தரவுகள் பிபிசி தமிழ் நியுஸ்லெட்டரை வழங்கும் நோக்கத்துக்காக பயன்படுத்தப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நியுஸ்லெட்டரை தொடர்ந்து பெற விரும்புகிறீர்களா என்று உறுதி செய்யுமாறு கோரப்படும்.
எந்த ஒரு நேரத்திலும் நீங்கள் வெளியேறவோ அல்லது பதிவை திரும்பப் பெறவோ விரும்பினால், உங்களைப் பற்றிய தகவல்கள் கிடப்பில் உள்ள தகவல்கள் பட்டியலில் வைக்கப்பட்டு, 90 நாள்களுக்குப் பிறகு நீக்கப்படும்.
உங்களது தனிப்பட்ட தரவுகள் ஐக்கிய ராஜ்ஜியம் (UK) மற்றும் ஐரோப்பிய பொருளாதார பகுதியில் (EEA) வைத்து பாதுகாக்கப்படும்.
உங்களது தரவுகள் ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியே பயன்படுத்தப்பட்டால், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய பொருளாதார பகுதியில் எவ்வாறு பாதுகாப்பாக கையாளப்படுகிறதோ அதே தரத்துடன் கையாளப்படுவதை பிபிசி உறுதி செய்யும்.
உங்களது உரிமைகள் மற்றும் கூடுதல் தகவல்கள்
தரவுகள் பாதுகாப்புச் சட்டப்படி உங்களுக்குள்ள உரிமைகள்:
- உங்களைப் பற்றி பிபிசி சேகரித்து வைத்துள்ள தரவுகளின் பிரதியை நீங்கள் கோர முடியும்.
- உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தகவல்களில் முரண்பாடுகள் இருந்தாலோ அல்லது முழுமை பெறாமல் இருந்தாலோ அதில் திருத்தம் செய்யுமாறு கோர உங்களுக்கு உரிமை உண்டு.
- உங்களைப் பற்றி நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை நீக்குமாறு கோர உங்களுக்கு உரிமை உண்டு. அதேநேரத்தில், அந்த உரிமையில் சில கட்டுப்பாடுகளும், விதிவிலக்குகளும் உண்டு. அதன்படி, பிபிசி உங்கள் கோரிக்கையை நிராகரிக்க முடியும்.
- சில குறிப்பிட்ட தருணங்களில், உங்களுடைய தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவோ அல்லது ஆட்சேபிக்கவோ உங்களுக்கு உரிமை உண்டு.
- சில குறிப்பிட்ட தருணங்களில், உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை உங்களுக்கோ அல்லது வேறு ஒரு நிறுவனத்துக்கோ அனுப்புமாறு கோருவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.
- உங்களுடைய உரிமைகள் தொடர்பாக, ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களுடைய தரவுகள் பாதுகாப்பு அதிகாரியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் உரிமைகள் தொடர்பாக மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்பினால், பிபிசி தனியுரிமை மற்றும் குக்கிஸ் கொள்கைகள் குறித்த http://www.bbc.co.uk/privacy என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
- உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை பிபிசி கையாண்ட விதம் தொடர்பாக உங்களுக்கு கவலைகள் இருந்தால், அத்தகைய கவலைகளை ஐக்கிய ராஜ்ஜியத்தின் கண்காணிப்பு ஆணையமான தகவல்கள் ஆணையர் அலுவலகத்தை (ICO), https://ico.org.uk/ என்ற இணைய முகவரியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தனியுரிமை அறிவிப்பில் தகவல் புதுப்பித்தல்
தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தால், தனியுரிமை அறிவிப்பில் தகவல்கள் புதுப்பிக்கப்படும்.












