நாம் நமது உடல் பருமனை தவறாக அளவிடுகிறோமா?

காணொளிக் குறிப்பு, பிஎம்ஐ மூலம் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான எடை கணக்கிடப்படுகிறது.
நாம் நமது உடல் பருமனை தவறாக அளவிடுகிறோமா?

வழக்கமாக உடல் நிறை குறியீட்டெண் அல்லது பிஎம்ஐ மூலம் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான எடை ஒருவருக்கு இருக்கிறதா என்பது கணக்கிடப்படுகிறது. பல பெரியவர்களுக்கு 25க்கு மேல் பிஎம்ஐ இருந்தால் அதிக எடை என்று கருதப்படுகிறது. 30க்கு மேல் என்றால் உடல் பருமன் என்று கருதப்படுகிறது.

இந்த எளிதான பிஎம்ஐ முறையை உலக சுகாதார அமைப்பு ஆதரிக்கிறது. ஆனால் கொழுப்பு, தசைகள் மற்றும் எலும்புகள் இடையிலான வேறுபாட்டை பிஎம்ஐ மூலம் அளவிட முடியாது.

மனிதர்களுக்கு வயதாகும்போது இடுப்பைச் சுற்றி தசை குறையும், கொழுப்பு அதிகரிக்கும், ஆனால் எடையில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது. எனவேதான் பிஎம்ஐ குறித்து மாற்றுக்கருத்துகள் உள்ளன.

இதுபற்றி விளக்கும் காணொளி இது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)