காணொளி: 87 ஆயிரம் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிப்பு
காணொளி: 87 ஆயிரம் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிப்பு
குஜராத்தின் சுரேந்திராநகர் பகுதியில் 87 ஆயிரம் சட்டவிரோத மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்ட காட்சி இது. அழிக்கப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 5.10 கோடி ரூபாய் ஆகும்.
குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருந்தாலும் சிலர் சட்டவிரோதமாக மதுவை விற்று வருகின்றனர்.
காவல்துறையினரால் கைப்பற்றப்படும் மதுபாட்டில்கள் நீதிமன்ற அனுமதி பெறப்பட்ட பின் இவ்வாறு அழிக்கப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



