நிலவின் மறுபக்கத்தில் கால் பதித்த சீன விண்கலம் - என்ன செய்ய போகிறது?

காணொளிக் குறிப்பு, நிலவின் மறுபக்கத்தில் கால் பதித்த சீன விண்கலம் - என்ன செய்ய போகிறது?
நிலவின் மறுபக்கத்தில் கால் பதித்த சீன விண்கலம் - என்ன செய்ய போகிறது?

சீனாவின் ஆளில்லா விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

சாங்ஹூ 6 எனும் இந்த விண்கலம் மே 3ஆம் தேதி ஏவப்பட்டது.

நிலவின் தென் துருவ-எய்ட்கென் படுகையில் இறங்கியுள்ள இந்த விண்கலம், பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரிக்கும்.

நிலவின் மறுபக்க பாறைகளை ஆய்வு செய்வதன் மூலம், கோள்கள் எப்படித் தோன்றின என்ற கேள்விக்கு விடை கிடைக்கலாம் என்று நிலவின் புவியியல் நிபுணர் ஜான் பெர்னெட்-ஃபிஷர் கூறுகிறார்.

நிலவின் மறுபக்கம் இதுவரை யாரும் செல்வதற்கு முயற்சி எடுக்காத, முழுவதும் ஆராயப்படாத ஒன்றாக உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)