காணொளி: விபத்தில் சிக்கிய விமானம் - சிதறிய பணக்கட்டுகள்
காணொளி: விபத்தில் சிக்கிய விமானம் - சிதறிய பணக்கட்டுகள்
பொலிவியாவின் எல் ஆல்டோவில் பணம் எடுத்துச் சென்ற ஒரு ராணுவ சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாண்டா குரூஸ் நகரத்திலிருந்து எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி அருகில் உள்ள நெடுஞ்சாலைக்குச் சென்று, அங்கிருந்த வாகனங்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
விமான விபத்துக்குப் பிறகு சிதறிக்கிடந்த பணத்தை எடுக்க முயன்றதாக கூறி மக்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



