பிபிசி தமிழில் இந்த ஆண்டு அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட 5 வரலாற்றுக் கட்டுரைகள்

2024 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் பிபிசி தமிழ் உங்களுக்கு பல்வேறு செய்திகளை எளிமையாகவும் விரிவாகவும் பல்வேறு கோணத்திலும் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு பிபிசி தமிழ் இணையதளத்தில் வெளியான வரலாற்று கட்டுரைகளில் பெருவாரியான மக்கள் வாசித்த ஐந்து கட்டுரைகளை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.


பட மூலாதாரம், Bloomsbury India
5. ராஜீவ் ஆட்சியில் இந்திய அரசு ரகசியங்களை திருடி 6 நாடுகளுக்கு விற்ற கோவை தொழிலதிபர் - சிக்கியது எப்படி?
கோவையைச் சேர்ந்த குமார் நாராயண் என்ற தொழிலதிபர் அரசாங்க ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். அரசு வேலையை விட்டு விலகிய பிறகு, அரசாங்கத்தில் வேலை செய்யும் நபர்களுடன் இணைந்து ஒரு ரகசிய குழுவை உருவாக்கினார். அதன் மூலம் அரசின் ரகசிய தகவல்களை பல நாடுகளின் தூதரகங்களுக்கு விற்றதால் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் எந்தெந்த ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு விற்றார்? அவர் கைது செய்யப்பட்ட பிறகு என்ன நடந்தது?
இது போன்ற கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து இந்த கட்டுரையை படியுங்கள்

பட மூலாதாரம், CalimaX/Alamy
4. நகர எல்லை தாண்டாத துறவி, 570 ஆண்டுக்கு முன்பே உலக வரைபடத்தை துல்லியமாக வரைந்தது எப்படி?
ஃப்ரா மௌரோ என்ற நபர் 570 ஆண்டுகளுக்கு முன்பே உலக வரைபடத்தை மிகத் துல்லியமாக வரைந்தார். 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான இவர், ஒரு இடத்திலேயே இருந்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளை எப்படி துல்லியமாக வரைந்தார் என்பது பலரின் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அவர் எவ்வாறு செய்தார் என்பதை முழுவதுமாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பட மூலாதாரம், HISTORYOFVADODARA.IN
3. மெட்ராஸில் பிறந்து மகாராஜாவை மணமுடிக்க முஸ்லிமாக மாறிய வதோதரா மகாராணி சீதாதேவி
சீதாதேவி தனது காதலருடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். தனது திருமணத்திற்கு தடையாக இருந்த சமூகப் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு, தனது காதலருடன் இணைவதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த முடிவு, சமூகத்தில் நிலவும் மதம், சாதி போன்ற காரணங்களால் ஏற்படும் திருமணத் தடைகளை எதிர்கொள்ளும் பலரின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
வதோதரா மகாராணி சீதாதேவியின் வாழ்க்கையை பற்றி முழுவதுமாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

2. தமிழ்நாட்டில் காதலிக்காக ராஜேந்திர சோழன் கட்டிய 'காதல் சின்னம்' பற்றி தெரியுமா?
சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் அவன் தனது காதலிக்காக கட்டிய காதல் சின்னம் பற்றி தெரியுமா? அவர் தனது அனுக்கி(காதலி) பரவை நங்கையின் வேண்டுகோளை ஏற்று கட்டிய கோவில் தான் அது.
அது எங்கு உள்ளது, எப்படி கட்டப்பட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படியுங்கள்

பட மூலாதாரம், Getty Images
1. இந்தியாவில் 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி பாம்பு' - எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள லிக்னைட் சுரங்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சில புதைபடிவங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதுவே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு புதைபடிவங்களில் மிக நீளமானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாம்பு பற்றி இந்த ஆராய்ச்சியில் வெளியான ஸ்வாரசியமான தகவல்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












