ஜி20 உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் - புகைப்படங்கள்

 ஜி 20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜி20 உச்சிமாநாடு தொடங்குவதற்கு முன்பு மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். அவருக்கு முன்பாக பாரத் என்ற வார்த்தையுடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் மிக முக்கியப் பொருளாதார அமைப்பான ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு பிரதமர் மோதி பலத்த பாதுகாப்புடன் வந்து இறங்கினார். அவரைத் தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்கும் மற்ற நாடுகளின் தலைவர்களும் வருகை தரத் தொடங்கினர்.

இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் சார்பாக, அதன் தலைவர் அஸாலி அஸ்ஸமனியை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்று, அவரைக் கட்டியணைத்து வாழ்த்தில் இருக்கையில் அமர வைத்தார்.

இன்றைய மாநாட்டின்போது மற்றுமொரு முக்கியமான வெற்றியையும் இந்தியா அடைந்துள்ளது. ஜி20 நாடுகளின் ஒருமித்த கருத்துடன் மாநாட்டிற்கான கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இன்றைய நிகழ்வின் காட்சிகளை விளக்கும் முக்கியமான புகைப்படங்கள் உங்களுக்காக...

 ஜி 20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. பாரத் மண்டபத்துக்கு வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்திய பிரதமர் மோதி வரவேற்ற காட்சி.
 ஜி 20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் பேசிக்கொண்ட காட்சி.
 ஜி 20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாநாட்டில், ஜி20 அமைப்பின் நிரந்திர உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்க்கப்பட்டது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரும் கொமொரோஸ் நாட்டின் அதிபருமான அஸாலி அஸ்ஸமனியை பிரதமர் மோதி வரவேற்ற காட்சி.
 ஜி 20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருக்கும் காட்சி.
 ஜி20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தனது மனைவி ரொஸாங்கில டா சில்வா உடன் பாரத் மண்டபத்துக்கு வந்த காட்சி.
 ஜி 20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, பிரதமர் நரேந்திர மோதி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கை குலுக்கிக்கொண்டனர்.
 ஜி 20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாரத் மண்டபத்துக்கு வந்த காட்சி.
 ஜி 20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
 ஜி 20 உச்சி மாநாடு

பட மூலாதாரம், Narendra Modi/ twitter

படக்குறிப்பு, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: