இந்தியாவுக்கு முன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க ரஷ்யா துடிப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, இந்தியாவுக்கு முன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க ரஷ்யா துடிப்பது ஏன்?
இந்தியாவுக்கு முன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க ரஷ்யா துடிப்பது ஏன்?

சந்திரயான் ஏவப்பட்டு பல நாள் கழித்து ஏவப்பட்ட ரஷ்ய விண்கலம் சந்திரயானுக்கு முன்பே நிலாவை அடையப் போகிறது. இதனால் இந்தியாவின் சாதனைக் கனவு தகர்க்கப்பட இருக்கிறது.

இது எப்படி சாத்தியமானது?

தற்போது ஒரு குட்டி விண்வெளி பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலன்கள் சென்று கொண்டிருக்கின்றன.

ஒன்று- இந்தியாவின் விண்கலம், மற்றொன்று ரஷ்யாவின் விண்கலம். நிலாவில் உள்ள பயனுள்ள தாதுக்கள் மற்றும் பனியினை தேடும் போட்டியில் தான் இந்தியா மற்றும் ரஷ்ய விண்கலங்கள் ஈடுபட்டுள்ளன.

விண்கலங்கள் புறப்பட்ட நேரத்தை கருத்தில் கொண்டால், இரண்டு விண்கலங்களும் ஒரே நேரத்தில் தான் அவர்களின் இலக்குகளான நிலவை அடைய வேண்டும்.

இதை யாரும் திட்டமிடவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு எதிர்பாராத திருப்பாக அமைந்துள்ளது.

தென் துருவத்தை குறிவைக்கும் இரண்டு நாடுகள்

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம்

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அதிகாரிகள் மறைக்கவில்லை.

இரு நாடுகளின் இந்த முயற்சி, விண்வெளி ஆராய்ச்சி தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன. சமீபத்தில் நமக்கு அருகில் உள்ள விண்வெளியில் கணிசமான பனிப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், விஞ்ஞானிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஏனெனில் எதிர்காலத்தில் நிலவின் தளத்தில் ராக்கெட் எரிபொருளை உருவாக்க தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க முடியும். கூடுதலாக, உரிய பதப்படுத்துதலுக்குப் பிறகு அந்த தண்ணீரைக் குடிக்கலாம்..

லூனா-25 மற்றும் சந்திரயான்-3 இடையேயான போட்டி சந்திரன் தொடர்பான ஆய்வுகளின் ஒரு புதிய சகாப்தத்தை உள்ளடக்கியது, இதில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் சந்திரனை குறிவைத்துள்ளன.

பலருக்கு இது நட்புரீதியான போட்டி. ஆனால், இன்னும் மனித ஆய்வின் புதிய அத்தியாயம் ஆபத்தில் உள்ளது. தனி நபர் தரையிறங்குதல் மற்றும் ஒரு குழுவினர் தரையிறங்குவதற்கு எடுக்கப்படும் சிறிய முயற்சிகள், வரவிருக்கும் தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகளில் சூரிய குடும்பத்தை வெல்வதில் மாபெரும் பாய்ச்சலுக்கு வழிவகுக்கும். யார் முதலில் அங்கு செல்கிறார் என்பது உண்மையிலேயே முக்கியமானது.

தென்துருவத்தில் தரையிறங்குவது புதிதா?

நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்குவது புதிதா?

பட மூலாதாரம், Getty Images

இதுவரை எந்த விண்கலமும் வெற்றிகரமாகச் சென்றதில்லை. அமெரிக்கா சார்பில் அனுப்பப்பட்டுள்ள அப்பல்லோ விண்கலன்கள் அனைத்தும் வடக்கே பூமியின் பாதைக்கு அருகில் உள்ள இடங்களுக்குச் சென்றன. அந்த தரையிறங்கும் தளங்கள் ஒப்பீட்டளவில் மென்மையான நிலப்பரப்பு மற்றும் நல்ல சூரிய ஒளியைக்கொண்டிருந்தன.

ஆனால், தென்துருவததில் நிலப்பரப்பு மிகவும் மேடு பள்ளங்கள் நிறைந்தது. மேலும், சூரியனில் இருந்து வரும் ஒளி கடுமையான கோணத்தில் வரும்.

இதுகுறித்து கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் மற்றும் கிரக அறிவியல் துறை பேராசிரியரான ஜாக் பர்ன்ஸ் பேசுகையில்,“அடிவானத்தில் சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். அதனால், நிழல்கள் மிக நீளமாக இருக்கும். சந்திரன் அதன் சாம்பல் மேற்பரப்பில் மிகவும் சீராக இருக்கும். எனவே, பள்ளங்கள் மற்றும் கற்பாறைகளை வேறுபடுத்துவது மிகவும் சவாலானதாக இருக்கும்” என்கிறார்.

அமெரிக்கா 2025 ஆம் ஆண்டில் தான் தனது ஆர்ட்டெமிஸ் III குழுவை சந்திரனின் தென் துருவத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. எனவே, அதற்கு முன்பா ‘ரோபோ’ லேண்டர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் குழுக்கள் கொண்ட விண்வெளிப் பயணம் எப்போதுமே கடினமாக இருக்கும் என்று விட்மேன் கோப் குறிப்பிடுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: