ஸ்பெயினில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் தத்தளித்த சுற்றுலா நகரம்
ஸ்பெயினில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் தத்தளித்த சுற்றுலா நகரம்
ஸ்பெயினின் பிரபல சுற்றுலா நகரான லன்சராடீயில் சனிக்கிழமை பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.
இரண்டு மணி நேரத்தில் சுமார் 6 செ.மீ அளவுக்கு மழை பெய்தது. சாலைகளில் தேங்கிய வெள்ள நீரில் கார்கள் சிக்கிக் கொண்டன.
லன்சராடீ நகர நிர்வாகத்தின்படி, சான் பார்டொலொமே (San Bartolomé) பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு முதல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழையால் அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வறண்ட காலநிலை மற்றும் எரிமலை பாறை மழை நீரை அதிகம் உறிஞ்சாத கேனரி தீவுகளில் லன்சராடீ நகர் அமைந்துள்ளதால், கனமழையின் போது, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



