கைவிடப்பட்ட பூனை, நாய்க்கு அடைக்கலம் கொடுத்த புத்த துறவி
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்த மதத் துறவியான மஹாசரணசோன் ஷின்னவாரோ, துறவறம் ஏற்ற பிறகும் விலங்குகள் மீது அன்பு கொண்டிருக்கிறார்.
கொரோனா தொற்றின்போது பாராமரிப்பின்றி கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளை இவர் கவனித்துக் கொள்கிறார். கோவிட்-19 தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களும், செல்லப் பிராணிகள் வளர்ப்பு தொழில் இருந்தவர்களும் தங்களிடம் இருந்த விலையுயர்ந்த நாய், பூனைகளை வளர்க்க முடியாமல் கைவிட்டனர்.
அப்படிக் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளை, மஹாசரணசோன் ஷின்னவாரோ கவனித்து வருகிறார். அவரிடம் காக்கேசியன் ஷெப்பர்ட், சவ் சவ், கோல்டன் ரெட்ரீவர், சைபீரியன் ஹஸ்கி உள்ளிட்ட பல நாய் வகைகள் உள்ளன.
இதேபோல நீளமான முடி கொண்ட ஸ்பின்க்ஸ், அமெரிக்கன் கர்ல் மற்றும் மெயின் கூன் வகை பூனைகளையும் இவர் வளர்த்து வருகிறார்.
துறவறம் மேற்கொள்ளும் துறவிகளுக்கு எந்தவொரு பொருளின் மீதோ, உயிர்களின் மீதோ பற்று இருக்கக் கூடாது என்று இவர் மீது சில விமர்சனம் முன்வைக்கப்பட்டன.
ஆயினும் கைவிடப்பட்ட அந்த உயிரினங்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவற்றுக்கு அடைக்கலம் அளிக்கிறார் இந்தத் துறவி.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









