மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் முன்னுள்ள 3 முக்கிய சவால்கள் என்ன?

மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் முன்னுள்ள 3 முக்கிய சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விவேக் கவுல்
    • பதவி, பொருளாதார நிபுணர்

இந்தியாவின் மத்திய பட்ஜெட்டை ஜூலை 23-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஜூன் மாதத் துவக்கத்தில் ஆட்சி அமைத்த நரேந்திர மோதி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் இது.

இந்தியப் பொருளாதாரம் கடந்த நிதியாண்டில், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 8.2% என்ற வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

ஆனால் தனிப்பட்ட நுகர்வு செலவினம் (private consumption expenditure) மிகவும் மெதுவாக 4% மட்டும் வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

தனிப்பட்ட நுகர்வு செலவினம் என்பது முதன்மையாக, இந்தியர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு செலவிடும் பணம். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் 55-60% ஆக உள்ளது.

ஏப்ரல் 2002- மார்ச் 2003 நிதியாண்டிற்கு பிறகு, தனிப்பட்ட நுகர்வு செலவினம் மிகவும் மெதுவான வளர்ச்சியை அடைந்தது கடந்த நிதியாண்டில்தான். (ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான கோவிட் பேரிடர் காலக்கட்டத்தை தவிர)

'தனிப்பட்ட நுகர்வு ’ வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை, மத்திய அரசின் பட்ஜெட் எதிர்கொள்ள வேண்டிய முதல் சவாலாக உள்ளது. அவ்வாறு செய்வதற்கான விரைவான வழி, மக்கள் கைகளில் அதிக பணத்தைப் புழங்கவிடுவதாகும். இதைப் பல வழிகளில் மேற்கொள்ள முடியும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

வரி குறைப்பு ஏன் அவசியம்?

இந்திய பட்ஜெட்: மோதியின் 3வது ஆட்சியின் முதல் பட்ஜெட் - அரசின் முன் இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பெட்ரோல், டீசல் விற்பனையில் மத்திய அரசு பெறும் வரி அதிகமாக உள்ளது. ஜூலை 1, 2024 அன்று, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு ரூ.94.72 ஆக இருந்தது. மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரிகள் - கலால் வரி, கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் ஆகியவை பெட்ரோல் விலையில் ஐந்தில் ஒரு பங்கு.

டீசலுக்கும் இதே நிலைதான், மத்திய அரசின் வரிகள் அதன் சில்லறை விலையில் 18% ஆக உள்ளது. இந்த வரிகளைக் குறைப்பதே மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான விரைவான வழி.

ஜூன் 2024இல் 5.1% ஆக இருந்த சில்லறை பணவீக்கத்தைக் குறைக்கவும் இது உதவும்.

மேலும், மத்திய அரசு வருமான வரியை குறைப்பது அல்லது வருமான வரி அடுக்குகளை அதிகரிப்பது. இது குறைவான வருமான வரியை செலுத்த மக்களுக்கு உதவுவதுடன், மக்களை அதிக செலவு செய்ய ஊக்குவிக்கும்.

இந்த வாதத்தின் ஒரு பிரச்னை என்னவென்றால், மக்கள் தொகையில் மிகக்குறைவானவர்களே வருமான வரி செலுத்துகிறார்கள்.

ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான தரவின்படி (நிதியாண்டு 2021-22) அந்த ஆண்டில் ஈட்டிய வருமானத்திற்காக 68.54 மில்லியன் இந்தியர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த எண்ணிக்கையில், 42.14 மில்லியன் பேர் வெறும் ரிட்டன் (return) மட்டுமே தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி எதையும் செலுத்தவில்லை. மேலும், 20.21 மில்லியன் மக்கள், ரூ.1,50,000 வரை வருமான வரி செலுத்தியுள்ளனர். எனவே வருமான வரியின் பெரும்பகுதி மீதமுள்ள 6.18 மில்லியன் மக்களால் செலுத்தப்பட்டது. இது மிகவும் குறைவான எண்ணிக்கை. எனவே, 'வருமான வரியைக் குறைப்பது, தனிப்பட்ட நுகர்வை அதிகரிக்க உதவாது.' இதுதான் வருமான வரிக் குறைப்புக்கு எதிராக முன்வைக்கப்படும் வாதம். இதுதான் எதார்த்தம் என்ற போதிலும், இந்த வாதத்தில் சில நுணுக்கங்கள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான தரவின்படி (நிதியாண்டு 2021-22) அந்த ஆண்டில் ஈட்டிய வருமானத்திற்காக 68.54 மில்லியன் இந்தியர்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த எண்ணிக்கையில், 42.14 மில்லியன் பேர் வெறும் ரிட்டன் (return) மட்டுமே தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி எதையும் செலுத்தவில்லை. மேலும், 20.21 மில்லியன் மக்கள், ரூ.1,50,000 வரை வருமான வரி செலுத்தியுள்ளனர்.

எனவே வருமான வரியின் பெரும்பகுதி மீதமுள்ள 6.18 மில்லியன் மக்களால் செலுத்தப்பட்டது. இது மிகவும் குறைவான எண்ணிக்கை.

எனவே, 'வருமான வரியைக் குறைப்பது, தனிப்பட்ட நுகர்வை அதிகரிக்க உதவாது.' இதுதான் வருமான வரிக் குறைப்புக்கு எதிராக முன்வைக்கப்படும் வாதம்.

இதுதான் எதார்த்தம் என்ற போதிலும், இந்த வாதத்தில் சில நுணுக்கங்கள் உள்ளன.

தனிப்பட்ட நுகர்வு மந்தநிலை vs கார்ப்பரேட் நிறுவன முதலீடு

இந்திய பட்ஜெட்: மோதியின் 3வது ஆட்சியின் முதல் பட்ஜெட் - அரசின் முன் இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

முதலில், இந்தியாவில், பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு தனிநபர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார். சராசரியாக, ஒரு இந்திய குடும்பத்தில் ஐந்து நபர்கள் உள்ளனர்.

எனவே, வருமான வரி குறைக்கப்பட்டால், வருமான வரி செலுத்துவோரின் வாங்கும் திறன் உயரும், அதேநேரம் ஒட்டுமொத்தமாக அவர்களது குடும்பத்தினர் அதிகமாகச் செலவழிக்க இது வழிவகுக்கும்.

எனவே 1,50,000க்கும் அதிகமாக வருமான வரி செலுத்தும் 6.18 மில்லியன் மக்களைவிடக் கணிசமாகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களைச் செலவழிக்க வைக்க இது வழிவகுக்கிறது.

இரண்டாவதாக, வருமான வரி செலுத்தும் பிரிவினர் உண்மையில் அதிகமாகச் செலவழிக்கக் கூடியவர்கள். ஒரு நபரின் செலவு மற்றொரு நபரின் வருமானம் என்பதால், அவர்கள் அதிகமாகச் செலவழிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். குறுகிய காலத்தில் மக்கள் அதிகமாகச் செலவழிப்பதை ஊக்குவிப்பதே அரசுக்கு இருக்கும் சிறந்த வழி.

தனிப்பட்ட நுகர்வு மந்தநிலையைத் தவிர, இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் மற்றொரு பெரிய பிரச்னை தேக்கமடைந்த தனியார் நிறுவன முதலீடுகள்.

ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரை கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவித்த புதிய முதலீட்டுத் திட்டங்கள், இரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு குறைவாக உள்ளது என தி ஹிந்து நாளிதழில் சமீபத்தில் வெளியான செய்தி கூறுகிறது.

உண்மையில், நுகர்வு வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கும், பெருநிறுவன முதலீட்டின் அதிகரிப்புக்கும் இடையே முக்கியமான தொடர்பு உள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு நுகர்வோரிடம் இருந்து அதிக தேவை இருக்கும் என்று நினைக்கும் பட்சத்தில், அதிக பணத்தை முதலீடு செய்யத் தயாராக இருப்பார்கள்.

ஆனால் தற்போதைய சூழலில், ​​அவர்கள் எதிர்பார்த்தபடி மக்களின் தேவைகள் அதிகரிக்கவில்லை. எனவே, தனியார் நுகர்வு வளர்ச்சியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

மற்றொருபுறம் கார்ப்பரேட் தலைமை முகவர்கள் பொதுவெளியில் பேசுகையில், இந்தியப் பொருளாதாரத்தின் வாய்ப்புகளைப் பற்றிப் பொறுப்புடன் பேசுகிறார்கள், ஆனால் அவர்களின் பேச்சில் இருக்கும் பொறுப்புணர்வு செயலில் இருப்பதாகத் தெரியவில்லை.

வேலைவாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

வேலையில்லாத் திண்டாட்டம்

இது மூன்றாவது பெரிய பிரச்சனைக்கு நம்மைக் கொண்டு செல்கிறது - `வேலையில்லா திண்டாட்டம்’. இந்திய இளைஞர்களுக்குப் போதுமான வேலைகள் இல்லாத சூழல் நிலவுகிறது.

இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பின் (CMIE) கூற்றுபடி, 2023-24இல் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR: labour force participation rate) 40.4% ஆக இருந்தது, 2022-23இல் 39.4% ஆக இருந்தது, ஆனால் 2016-17ல் இது 46.2% ஆக சிறப்பான நிலையில் இருந்தது.

மக்கள் தொகையில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர் விகிதம் எவ்வளவு உள்ளது என்பதை பொறுத்து `LFPR’ வரையறுக்கப்படுகிறது.

வேலையில் இருப்பவர்கள், வேலையில்லாமல் இருப்பவர்கள் அல்லது வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் மற்றும் தீவிரமாக வேலை தேடுபவர்கள் போன்ற நிலையில் உள்ளனர்கள் இதில் அடங்கியுள்ளனர்.

இந்த வீழ்ச்சிக்கு ஓர் எளிய விளக்கம் என்னவெனில், வேலை கிடைக்காத பலர் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டனர். மேலும், 2023-24இல் மக்கள் தொகை 2016-17இல் இருந்த மக்கள் தொகையைவிட அதிகமாக உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, தொழிலாளர் சக்தியில் (Labour force) இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை இது குறிக்கிறது.

இந்திய பட்ஜெட்: மோதியின் 3வது ஆட்சியின் முதல் பட்ஜெட் - அரசின் முன் இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

மறுபுறம், 2019-20ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 2023-24ஆம் ஆண்டின் இறுதி வரை 109 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி சில தரவுகளைச் சமீபத்தில் வெளியிட்டது. இந்தத் தரவுகளின்படி, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய கோவிட் பேரிடர் காலகட்டத்தில் கூட சுமார் 43 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்கிறார் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நீண்ட காலம் தொடரக்கூடிய வேலைவாய்ப்பு மையத்தின் தலைவரான அமித் பசோல்.

`பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ ஊடகத்திடம் பேசிய அவர், “நான் அவற்றை வேலைகள் என்று சொல்லமாட்டேன். வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான தேவை இல்லாததால், வேலை வாய்ப்புகளின்றி, பலர் விவசாயம் அல்லது சுயதொழில் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்” என்றார்.

அரசுக்கு நிம்மதி அளிக்கும் லாப பங்குத் தொகை

இது மீண்டும் நம்மை தனிப்பட்ட நுகர்வு வளர்ச்சியின் மந்தநிலை பற்றிய புள்ளிக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. குறுகிய காலத்தில், தனிப்பட்ட நுகர்வு வளர்ச்சி உயரும் வரை, தனியார் முதலீடுகள் அதிகரிக்காது. அதாவது வேலை செய்யும் வயதில் இருக்கும் இளைஞர்களுக்குப் போதுமான வேலைகள் உருவாக்கப்படாது.

அதனால்தான் தனிப்பட்ட நுகர்வு வளர்ச்சியின் மறுமலர்ச்சி வரவிருக்கும் பட்ஜெட்டின் மையமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில், வரிகளைக் குறைப்பது அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படுத்தாமல் இருக்காது. அரசிடம் வரம்பற்ற தொகை இல்லை என்பதே எதார்த்தம். வரிகளைக் குறைத்தால், அரசு மேற்கொள்ள வேண்டிய செலவினங்களுக்குத் தொடர்ந்து நிதி அளிப்பதற்காக வேறு எங்கிருந்தோ பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் அல்லது அதன் செலவைக் குறைக்க வேண்டும்.

இந்திய பட்ஜெட்: மோதியின் 3வது ஆட்சியின் முதல் பட்ஜெட் - அரசின் முன் இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

எந்தவோர் அரசாங்கமும் வரிகளைக் குறைக்க முடிவு செய்யும்பட்சத்தில், செலவைக் குறைக்கவில்லை என்றால், அது நிதிப் பற்றாக்குறை அல்லது அது வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்க வழிவகுக்கும்.

இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 2023-24இல் ரூபாய் 16.54 டிரில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6% ஆக இருந்தது.

நிதிப்பற்றாக்குறை அதிகமாக இருப்பதால், நுகர்வு வளர்ச்சியை அதிகரிக்க அரசாங்கம் வரிகளைக் குறைத்தால், மேலும் சவாலாக இருக்கும்.

இந்த ஆண்டு (2023-24)ரிசர்வ் வங்கி இந்திய அரசுக்கு வழங்கியுள்ள லாபப் பங்கு ரூ.2.1 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. 2022-23இல் ரிசர்வ் வங்கி லாபப் பங்காக ரூ.0.87 டிரில்லியன் வழங்கியது.

மேலும், அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் லாபப் பங்குத் தொகையும் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது. இந்த வழிகள் மூலம் வரும் பணம் அரசுக்கு சற்று நிம்மதியைக் கொடுக்கும். எனவே, வரிகளைக் குறைக்கவும் உதவும்.

- விவேக் கவுல் `Bad Money’ நூலின் ஆசிரியர்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)