கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த் தாய் வாழ்த்து- தமிழக கட்சிகள் கண்டனம்

தமிழ்த் தாய் வாழ்த்து

கர்நாடகாவின் ஷிவமோகா பகுதியில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பாஜக வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் மும்முரம் காட்டுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

இதில், பாஜகவின் தேர்தல் இணைப் பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளார். தேர்தலையொட்டி கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், ஷிவமோகா நகரில் உள்ள தேசிய கல்விக்கழக திடலில் (என்.இ.எஸ்) நேற்று பாஜக வாக்கு சேகரிப்புக் கூட்டம் நடைபெற்றது. ஷிவமோகாவில் தமிழர்கள் கணிசமாக வசிக்கிறார்கள். இதனால், தமிழ் பேசும் வாக்காளர்களை கவரும் விதமாக ஷிவமோகா பாஜக சார்பில் வாக்கு சேகரிப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்டவர்களில் பெருபாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. ஷிவமோகா தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.என். சன்ன பசப்பா, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா, அண்ணாமலை உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரும் எழுந்து நின்றனர்.

அப்போது, ஈஸ்வரப்பா உடனடியாக சென்று தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை நிறுத்தக் கூறினார். பின்னர் மைக்கில், "கன்னட மாநில பண் பாடத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் மேடைக்கு வந்து பாடுங்கள்," என்றார். ஆனால், மேடைக்கு யாரும் செல்லாத நிலையில், கன்னட மாநில பண் இசைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்த் தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பா அவமதித்து விட்டார் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஷிவமோகா தமிழ்த் தாய் சங்கத்தின் செயலாளர் தண்டபாணியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சேகரிப்பதற்காக தமிழ் அமைப்புகளின் கூட்டம் என்ற பெயரில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஜகவில் உள்ள தமிழர்கள்தான் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அண்ணாமலையும் இந்த கூட்டத்திற்கு வந்திருந்தார். கூட்டத்தில் கன்னட மாநிலப் பண்ணை முதலில் இசைப்பதற்கு பதிலாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டிருக்க வேண்டிய தேவையே இல்லை. தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு கொண்டிருந்தபோதே, ஈஸ்வரப்பா அதை நிறுத்தக்கூறி, கன்னட மாநிலப் பண்ணை யாராவது பாடுவீர்களா என்று கேட்டார். அங்கிருந்த அனைவரும் தமிழர்கள் என்பதால் யாரும் செல்லவில்லை.

ஈஸ்வரப்பா சில நிமிடங்கள் அமைதியாக இருந்திருந்தால், தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் நிறைவுப்பெற்றிருக்கும். அதைவிடுத்து, அதை பாதியில் நிறுத்தியிருக்க வேண்டியதில்லை. நிச்சயம் இது கண்டிக்கத்தக்கது," என்று தண்டபாணி கூறினார்.

தமிழக கட்சிகள் கண்டனம்

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

இந்த சம்பவத்துக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக மாநிலம் சிவமோகாவில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, அதை அம்மாநில பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா குறுக்கிட்டு பாதியில் நிறுத்தச் செய்ததுடன், அதற்கு மாற்றாக கன்னடமொழி வாழ்த்தை இசைக்கச் செய்திருக்கிறார். அவரது அப்பட்டமான மொழிவெறி கண்டிக்கத்தக்கது!

தமிழ் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் நோக்குடன் தான் அந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கச் செய்யப்படுவது தான் முறையாகும். தமிழ்மொழியை தாழ்த்தியும், கன்னட மொழியை உயர்த்தியும் ஈஸ்வரப்பாவும், பிற அமைப்பாளர்களும் நடந்து கொண்டது பெரும் தவறு. இத்தகைய மொழி வெறிச்செயலை அந்த மேடையில் இருந்த தமிழர்கள் எவரும் தட்டிக் கேட்காதது வருத்தம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் எதிர்ப்பை பதிவு செய்துள்ள திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, "தமிழ்த் தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்," என்று விமர்சித்துள்ளார்.

தமிழ்த் தாய் வாழ்த்து

பட மூலாதாரம், Twitter@K Annamalai

கனிமொழியின் விமர்சனத்துக்கு பதிலளித்த அண்ணாமலை, "ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். நமது தேசிய கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக் கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்" என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்," என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மீண்டும் இசைக்கப்படவில்லை என்று ஷிவமோகா தமிழ்த் தாய் சங்கத்தின் செயலாளர் தண்டபாணி நம்மிடம் உறுதிப்படுத்தினார்.

கனிமொழி

அண்ணாமலையின் விமர்சனம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிபிசியிடம் பேசுகையில், "எந்த மொழியும் அவமரியாதை செய்யப்படக் கூடாது. அண்ணாமலை அங்கு இருந்தார். இது தொடர்பாக அவரால் நிச்சயம் சொல்லி சரி செய்திருக்க முடியும். குறைந்தபட்சம் அங்கிருந்தவர்களுக்கு சொல்லி புரிய வைத்திருக்கலாம்," என்றார்.

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் என்ற வரி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து பேசும்போது, "எல்லா வரிகளையும் நாம் பயன்படுத்த முடியாது. மற்றவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது. தமிழ் தெரிந்த, மற்றவர்களின் மொழிகளையும் அவர்களின் உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்தவர்களுக்கு இது தெரியும்," என்று கனிமொழி குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்

டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்