உலகக்கோப்பை இறுதிப்போட்டி - கேமராவில் உறைந்த முக்கிய தருணங்கள்

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முடிவுக்கு வந்திருக்கிறது. தொடக்கம் முதலே வெற்றிமேல் வெற்றிகளை குவித்து தோற்டிக்கவே முடியாத அணியாக வலம் வந்த இந்திய அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆஸ்திரேலிய அணியிடம் இறுதிப்போட்டியில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அந்த அணியை வெற்றிக்கோட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த தருணத்தில் போட்டி நடைபெற்ற ஆமதாபாத் நரேந்திரே மோதி ஸ்டேடியம் எப்படி இருந்தது? களத்தில் வீரர்களும், களத்திற்கு வெளியே போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் என்ன செய்தனர்? கேமராவில் உறைந்த அந்த தருணங்களை பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)