காஸா: போர் நிறுத்தத்தை அறிவித்த ஹமாஸ்; மகிழ்ச்சியில் மக்கள்

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஹமாஸ் கூறியுள்ளது.
காஸா: போர் நிறுத்தத்தை அறிவித்த ஹமாஸ்; மகிழ்ச்சியில் மக்கள்

கத்தார் மற்றும் எகிப்து முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த காஸா மக்கள், வீதிகளில் இறங்கி ஹமாஸின் போர் நிறுத்த முடிவை கொண்டாடினர்.

ஆனால் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஹமாஸ் கூறியுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலை தாக்கி, சுமார் 1,200 பேரைக் கொன்று 253 பணயக் கைதிகளைக் கைப்பற்றியபோது காஸாவில் போர் தொடங்கியது.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, காஸாவில் இஸ்ரேலின் அடுத்தடுத்த ராணுவ தாக்குதல்களில் குறைந்தது 34,683 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 78,018 பேர் காயமடைந்துள்ளனர்.

காஸா: போர் நிறுத்தத்தை அறிவித்த ஹமாஸ், மகிழ்ச்சியில் மக்கள்.

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)