டைட்டானிக் கப்பலில் தங்கக் காசுகள், எகிப்திய மம்மிகள் இருந்ததா? 5 முக்கிய உண்மைகள்

பட மூலாதாரம், Getty Images
அந்த இரவு டைட்டானிக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அட்லாண்டிக் கடலில் உள்ள பனிப்பாறையில் மோதி அதன் பயண இலக்கை அடைவதற்கு முன்பே மூழ்கியது. இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு 111 ஆண்டுகள் ஆகிறது.
பிரிட்டனின் சவுத்தாம்ப்டனில் இருந்து கிளம்பி அமெரிக்காவின் நியூயார்க் நகரதிற்குப் புறப்பட்ட கப்பல் மணிக்கு 41 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
மூன்று மணிநேரத்திற்குள், டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 14, 1912 இரவு மூழ்க ஆரம்பித்து 15ஆம் தேதி அதிகாலையில் முழுதாக கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் டைட்டானிக் பேரழிவு இன்றளவும் மிகப்பெரிய கடல் பேரழிவாகக் கருதப்படுகிறது.
செப்டம்பர் 1985இல், டைட்டானிக் இடிபாடு தோண்டப்பட்டது. இது கனடாவின் நியூஃபவுண்ட்லாந்துக்கு 650 மைல் தொலைவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து நான்காயிரம் மீட்டர் ஆழத்தில் விபத்து ஏற்பட்டது.
மோதியதில் கப்பல் இரண்டு பாகங்களாகப் பிரிந்தது. மூழ்கிய இடத்தில், டைட்டானிக்கின் இரண்டு பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இரண்டு பாகங்களுக்கும் இடையே 800 மீட்டர்கள் உள்ளன.
பேரழிவு நிகழ்ந்து 111 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் சிதைவுகள் மர்மமாகவே உள்ளது. டைட்டானிக் கப்பல் நீர் கல்லறை என்று கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து ஏராளமான வதந்திகள், கட்டுக்கதைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உட்பட்டது.
இந்தக் கட்டுரையில் இருந்து டைட்டானிக் கப்பலைப் பற்றிய 5 முக்கிய உண்மைகளை இப்போது தெரிந்துகொள்வோம்.
1. டைட்டானிக் வேக சாதனை படைக்க முயன்றதா?

பட மூலாதாரம், Getty Images
கடல் பயண வேக சாதனையை முறியடிப்பதை டைட்டானிக் இலக்காகக் கொண்டதாகப் பல வதந்திகள் உள்ளன.
இருப்பினும், இது உண்மைக்குப் புறம்பானது. இந்தக் கப்பலின் வேகம் திட்டமிடப்படவில்லை. கப்பல் ஒரு வசதியான மற்றும் பொழுதுபோக்கு பயணத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில், கப்பல் வேகமான கப்பல்களுடன் போட்டியிட முடியவில்லை.
2. டைட்டானிக் கப்பலில் தங்கக் காசுகள், எகிப்திய மம்மிகள்
டைட்டானிக் கப்பலைப் பற்றி அடிக்கடி சொல்லப்படும் கதை. இந்தக் கப்பல் எகிப்திய மம்மிகள் மற்றும் தங்க காசுகளைக் கொண்டு செல்வதாக வதந்தி பரவியது.
இருப்பினும், இந்தக் கப்பலின் சரக்குப் பட்டியலில் தங்க நாணயங்கள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
'ஒயிட் ஸ்டார்' என்ற கப்பலும் 1917இல் தங்கப் பணத்தை ஏற்றிச் சென்றபோது கடலில் மூழ்கியது.
டைட்டானிக் கப்பலில் எகிப்திய மம்மிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக மற்றொரு வதந்தி பரவியது. இந்தக் கப்பலில் இருந்தவர்கள் மிகவும் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருந்ததாகப் பல கணக்குகள் உள்ளன.
கப்பல் மூழ்கியதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கடலில் காணாமல் போயின. இந்தத் தயாரிப்புகளுக்கு, பல பயணிகள் காப்பீடு கோரிக்கைகளைச் செய்கிறார்கள். இருப்பினும், எகிப்திய மம்மிகள் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.
3. ஷாம்பெயின் பாட்டிலை திறக்க முடியவில்லையா?

பட மூலாதாரம், Getty Images
டைட்டானிக் வெளியீட்டு விழா அன்று, ஷாம்பெயின் பாட்டிலைத் திறக்க முயன்றபோது, பாட்டிலை திறக்க முயலவில்லை. இது துரதிஷ்டவசமானது என்று கருதப்படுகிறது.
இருப்பினும், இது நிகழ்ந்ததற்கான ஆதாரம் எங்கும் இல்லை. ஒயிட் ஸ்டார் லைன் கப்பல்களுக்கு அவ்வளவு கெட்ட பெயர் இல்லை.
4. மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு உயிர் காக்கும் படகுகள் மறுக்கப்பட்டதா?
கப்பலில் உயிர் காக்கும் படகுகள் அதிகம் இல்லை. கப்பல் பனிப் பாறையில் மோதிய பிறகு மூன்றாம் வகுப்புப் பயணிகளை லைஃப் படகில் ஏற அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
டைட்டானிக் படத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்தக் கூற்றுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது.
பெரும் எண்ணிக்கையிலான மூன்றாம் வகுப்புப் பயணிகள் உயிரிழந்த போதிலும், அவர்களுக்கு உயிர்காக்கும் படகில் இடம் மறுக்கப்படவில்லை.
“கப்பல் பனிப்பாறையில் மோதியபோது நான் எனது பங்க்கில் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போது பலத்த சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை நான் கேட்டதும், நான் உடனடியாக டெக்கில் ஏறினேன்," என்று ஐரிஸ் மேன் டேனியல் பெர்க்லி கூறினார்.
படியில் இறங்கியபோது கேட் மூடப்படவில்லை. முதல் வகுப்புப் பயணி ஒருவர் உயிர் காக்கும் படகில் ஏற்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.
5. பெண் போல் உடையணிந்து லைஃப் படகில் ஏறினார்

பட மூலாதாரம், Getty Images
ஒரு செய்தித்தாள் கட்டுரையின்படி, வில்லியம் ஸ்லோப்பர் என்ற ஆண், உயிர்காக்கும் படகில் ஒரு இடத்தைப் பெறுவதற்காக பெண்ணாக வேடமிட்டார்.
இதுவும் உண்மை இல்லை. வில்லியம் ஸ்லோப்பர் அதை ஒப்புக்கொள்ள ஒருபோதும் தயாராக இல்லை.
முதலில் பெண்கள் குழந்தைகளை உயிர்காக்கும் படகுகளில் அமர வைத்து அதன் பிறகுதான் ஆண்கள் வந்தனர்.
கப்பலில் இருந்த பெரும்பாலான ஆண்கள் உயிர்காக்கும் படகுகளைப் பயன்படுத்தினர். ஆண்களில் பாதிப் பேர் உயிருடன் வெளியேறினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












