மொராக்கோ நிலநடுக்கம்: நள்ளிரவில் நடந்தது என்ன? அதிர வைக்கும் காட்சிகள்

காணொளிக் குறிப்பு, மொராக்கோ நிலநடுக்கம்: சரிந்த கட்டடங்கள்; சிதறிய குடும்பங்கள்

வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் வெள்ளி நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் பாதிப்பை விளக்கும் புகைப்பட தொகுப்பு பின்வருமாறு...

மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளன. கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் ஒருவர் நடந்து வரும் காட்சி
மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிக பிரபலமான சுற்றுலாத்தலமாக அறியப்படும் மராகேஷில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மராகேஷில் இருந்து வெறும் 44 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் கட்டடத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை முதியவர் ஒருவர் பார்க்கும் காட்சி
மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மராகேஷில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள சதுக்கம் முன்பு தரையில் படுத்துறங்கும் காட்சி
மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்டட இடிபாடுகள் பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மொராக்கோ ஆயுதப் படை வீரர்கள்
மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள கழுதையை ஒருவர் மீட்க முயற்சிக்கும் காட்சி
மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் சாலைகளில் கூடாரம் அமைத்து தங்கியுள்ள காட்சி
மொராக்கோ நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: