வங்கதேச பிரதமரை நாட்டை விட்டே துரத்திய மாணவர் போராட்டம் நடந்தது எப்படி?

வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்தின் மீது ஏறி நிற்கும் போராட்டக்காரர்கள்

வங்கதேசத்தில் 15 ஆண்டுகளாக நீடித்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு கடந்த ஜூலையில் வெடித்த மாணவர் போராட்டம் முடிவு கட்டியுள்ளது. மாணவர் போராட்டத்தால் எழுந்த அசாதாரண சூழல் காரணமாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறிவிட்டார். அவர் எங்கே செல்லப் போகிறார்? அவரது எதிர்காலத் திட்டம் என்ன? என்பது இன்னும் தெளிவாகவில்லை.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று ராணுவ தளபதி அறிவித்துள்ளார். வங்கதேச அரசியலில் 2 தசாப்தங்களாக கோலோச்சிய ஷேக் ஹசீனாவை ஆட்சி, அதிகாரத்தில் இருந்து அகற்றிய மாணவர் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும் புகைப்படங்களைப் பார்க்கலாம்.

வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா நாட்டை விட்டே வெளியேறியதை டாக்காவில் கொண்டாடும் போராட்டக்காரர்கள்
வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாக்காவில் நாடாளுமன்ற கட்டடம் அருகே குழுமியுள்ள போராட்டக்காரர்கள்
வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்தின் மீது ஏறி நிற்கும் போராட்டக்காரர்கள்
வங்கதேச போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திற்குள் செல்ஃபி எடுத்த போராட்டக்காரர்கள்
வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம், CHANNEL24

படக்குறிப்பு, பிரதமர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்ற போராட்டக்காரர்கள்
வங்கதேச போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாக்காவில் வங்கபந்து (Bangabandhu) நினைவு அருங்காட்சியகத்திற்கு தீ வைத்து, பொருட்களை சூறையாடி செல்லும் போராட்டக்காரர்கள்.
வங்கதேச போராட்டம் 2024
படக்குறிப்பு, பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் நிறுவப்பட்டிருந்த ‘வங்கதேச தந்தை’ என போற்றப்படும், ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை உடைத்த போராட்டக்காரர்கள்
வங்கதேச போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச போராட்டக்களத்தில் சக போராட்டக்காரருடன் கண்ணீர் மல்க கட்டியணைத்து தனது உணர்வை வெளிப்படுத்திய நபர்.
வங்கதேச போராட்டம் 2024

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வங்கதேச போராட்டக்களத்தில், மக்கள் இராணுவ வீரர்களுடன் கை குலுக்கும் காட்சி
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீக்கிரையான வாகனத்தில் இருந்து எழுந்த புகையை கட்டுப்படுத்தும் தீயணைப்பு துறையினர்
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்க விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வம்சாவளிக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை நடத்தினார்கள்.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 4ம் தேதி அன்று மாணவர்கள் போராட்டத்தின் போது பாதிப்புக்கு ஆளான பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக வளாகம்.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர்கள் போராட்டத்தின் போது பாதிப்புக்கு ஆளான பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள்.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கலக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் காவல்துறையை சேர்ந்த நபர்களும் உயிரிழந்துள்ளனர். சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதாகவும், இதில் 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தையே உலுக்கியுள்ள மாணவர் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்திருக்கின்ற சூழலில், அந்நாட்டு பிரதமர் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். பதட்டமான சூழலில் அடுத்த என்ன நடக்க உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)