கத்தார் 2022: இரானை வீழ்த்திய இங்கிலாந்து - தொடக்க ஆட்டத்திலேயே அதிரடி காட்டிய வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
2022 உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் இரானுக்கு எதிராக இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தோஹாவின் கலிஃபா சர்வதேச மைதானத்தில் ஜூட் பெல்லிங்ஹாம், புகாயோ சாகா, ரஹீம் ஸ்டெர்லிங் ஆகியோர் இங்கிலாந்தின் முதல் மூன்று கோல்களை 15 நிமிடங்களுக்குள் அடித்தனர். சாக்கா இரண்டாவது பாதியிலும் தனது முதல் வெற்றியைத் தொடர்ந்தார்.அதே நேரத்தில் மார்கஸ் ராஷ்போர்ட் மற்றும் ஜாக் கிரேலிஷ் இங்கிலாந்தின் மொத்த கோல் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தினர்.
இரானின் 4-3-3க்கு எதிராக இங்கிலாந்து அணி 4-5-1 பார்மேஷன் சாதகமாக அமைந்தது. இங்கிலாந்து அணிக்காக, ஜூட் பெல்லிங்ஹாம் 35வது நிமிடத்தில் நீடித்த முட்டுக்கட்டையை முறியடித்து, மையப்பகுதிக்கு கிளாசிக் ஹெடர் மூலம் கோல் அடித்தார். அவருக்கு லூக் ஷா உதவினார். ஆரம்பம் முதலே இங்கிலாந்து, ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், புகாயோ சாக்கா ஒரு தளர்வான பந்தை அடித்து 43வது நிமிடத்தில் வேகத்தை கூட்டினார். இதன் மூலம் இரானுக்கு எதிராக இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது கோலைப் புரிந்துகொண்டு சமாளிக்க முயன்றது இரான். அந்த நேரத்தில் மூன்றாவது கோலைப் போட்ட இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் இரானிய வீரர்களை திகைக்க வைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
கேப்டன் ஹாரி கேனின் உதவியால், ஸ்டெர்லிங் தனது பூட்டின் வெளிப்புறம் மூலம் பந்தை அடித்தபோது இங்கிலாந்து 3-0 என முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தில் காய நேரம் 14 நிமிடங்கள் சேர்க்கப்பட்டாலும், இரானிய கோல்கீப்பர் அலிரேசா பெய்ரன்வாண்ட் தனது சக வீரர் மஜித் ஹொசைனியுடன் மோதிய போதும் இரான் பந்தை வலைக்குள் கொண்டு வர சிரமப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
கோல்கீப்பர் அலிரேசா பெய்ரன்வாண்ட், தனது சக வீரரான மஜித் ஹொசைனியுடன் மோதிக் கொண்டதில் அவரது மூக்கில் ரத்தம் தோய்ந்தது. இதையடுத்து சில நிமிடங்களுக்கு மைதானத்திலேயே அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது.
ஆனால், முதல் பாதிக்குப் பிறகு ஆட்டத்தின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.
இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்களை கட்டுப்படுத்தும் வகையில் இரானிய கால்பந்துகள் மிகவும் கடுமையானதாக இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், புகாயோ சாக்காவை நிறுத்துவது மட்டும் கடினமான வேலையாகத் தோன்றியது.
இதன் தொடர்ச்சியாக 62வது நிமிடத்தில் சாக்கா மீண்டும் கோல் அடித்தார். ஸ்டெர்லிங்கின் உதவியைப் பெற்ற இங்கிலாந்து வீரர், குறைவான வேகத்தில் பந்தை அடித்தாலும் அது நேராக வலைக்குச் சென்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் கோல் எண்ணிக்கை 4-0 என ஆகி முன்னிலை பெற்றது. இதேவேளை இங்கிலாந்தின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை, காரணம் இரானின் மெஹ்தி தரேமி 3 நிமிடங்களுக்குப் பிறகு அதை ஒரு கோல் மூலம் மட்டுப்படுத்தினார். அந்த நேரத்தில் எதிரணியின் கோலால் இருப்புக் கொள்ள முடியாமல் இருந்த ஒரு அணியாக இங்கிலாந்து காணப்பட்டது.
அந்த அணி விரைவாக சாக்காவுக்குப் பதிலாக மார்கஸ் ராஷ்போர்டை சேர்த்தது. அவர் 71வது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோல் அடித்த பிறகு இங்கிலாந்து அணி இரானுக்கு எதிராக 5-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இத்துடன் நிற்காமல் அந்த இங்கிலாந்து வீரர் ஆக்ரோஷமான அணுகுமுறையை தொடர்ந்தார்.
ஜாக் கிரேலிஷ் இங்கிலாந்துக்காக 6வது கோலை அடித்தார். ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்குஅதன் கோல் 6-1 என ஆனது. இந்த ஆட்டத்தில் அவர் அடித்த முதலாவது கோல் இதுவாகும். ஆட்டத்தில் 10 நிமிடங்கள் சேர்க்கப்பட்ட பிறகும், இங்கிலாந்திடம் ஏற்பட்ட மோசமான தோல்வியிலிருந்து இரானால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட 10வது நிமிடத்தில், இரானுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது.அதை மெஹ்தி தரேமி பயன்படுத்திக் கொண்டு நேராக வலைை நோக்கி பந்தை அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து 6 புள்ளிகளையும், இரான் 2 புள்ளிகளையும் பெற்றன. அணிகளின் வரிசையில் 21வது இடத்தில் உள்ள இரான், 1998, 2006 மற்றும் 2018இல் தொடக்கப் போட்டியில் வென்றது. ஆனால் 2002, 2010 மற்றும் 2014இல் தோல்வியடைந்தது.
துவங்கும் முன்பே தலைகாட்டிய அரசியல்

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக திங்கட்கிழமை ஆட்டம் தொடங்கவிருந்த கடைசி நேர அரசியல் முன்னேற்றங்களால் போட்டியின் தாக்கத்தை விஞ்சும் வகையில் பல செயல்பாடுகள் அரங்கேறின.
கிக்-ஆஃப் தொடங்குவதற்கு சில மணி நேரத்தில், இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனிடம் எல்ஜிபிடி+ சமூகத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலான ஆர்ம் பேண்ட்-ஐ அணிய வேண்டாம் அல்லது தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து எந்த பாகுபாடும் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமான பேண்டை அணிய கேப்டன் ஹாலி கேன் நடவடிக்கை எடுத்தார். அந்த பேண்டை அவரை சக வீரர்களின் கையில் கட்டி விட்டார்.

பட மூலாதாரம், Getty Images
மறுபுறம், இரானிய அணியினர் தங்கள் தாயகத்தில் ஆட்சியாளர்களின் கட்டுப்பாடுக்கு எதிராக போராடிய மாசா அமினி என்ற செயல்பாட்டாளரின் மறைவை கண்டிக்கும் வகையிலான போராட்டங்களுக்கு ஆதரவாக போட்டியின் துவக்கத்தில் இசைக்கப்பட்ட தேசிய கீதத்தை பாடாமல் புறக்கணித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












