இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் வரி ஏன்? - டிரம்ப் அளித்த பதில்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு மேலும் 25% வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகு வாஷிங்டன் டிசி-யில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, நிருபர் ஒருவர், "ரஷ்ய எண்ணெயை வாங்கும் வேறு சில நாடுகள் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கூறினர். உதாரணமாக, சீனாவும் வாங்குகிறது. ஆனால் இந்தியா மீது மட்டும் ஏன் கூடுதல் வரிகளை விதிக்கிறீர்கள்?" என டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், "8 மணி நேரம் தான் கடந்துள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்." என்றார். ஆனால் இந்தியா மீது மட்டும் ஏன் கூடுதல் வரிகளை விதிக்கிறீர்கள்? என மீண்டும் அந்த நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, "நீங்கள் இன்னும் நிறைய வரிகளை பார்க்கப்போகிறீர்கள்" என பதில் அளித்துள்ளார் டிரம்ப்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு









