உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் மறக்க முடியாத தருணங்கள்

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரான்ஸ் கோல்கீப்பர் ஹியூகோ லோரிசை ஏமாற்றி அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா கோலடித்த தருணம். 2-0 என முன்னிலை பெற்ற அர்ஜென்டினாவின் வெற்றி உறுதி என்றே கருதப்பட்டது.
    • எழுதியவர், எம்மா ஸ்மித்
    • பதவி, பிபிசி விளையாட்டு

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்த பரபரப்பான இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திலும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, சாம்பியனைத் தீர்மானிக்க ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட, கோன்சலோ மான்டியேல் அடித்த கோல் அர்ஜென்டினாவின் வெற்றிக்கான கோலாக அமைந்தது. பிரான்சை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது. 

லியோனல் மெஸ்ஸி 2 முறையும், ஏஞ்சல் டி மரியா ஒரு முறையும் கோலை வலைக்குள் திணிக்க, பிரான்சுக்கு கிலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம், 1966-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஹர்ஸ்டுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் எம்பாப்பே பெற்றார்.

முடிவில், அர்ஜென்டினா வெற்றி பெற்று மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லுசைல் மைதானத்தில் தங்கக் கோப்பையை கைகளில் ஏந்திய தருணம் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் மணிமகுடமாக அமைந்தது. 

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இறுதிப்போட்டியின் மறக்க முடியாத தருணங்களை புகைப்பட வடிவில் காணலாம்.

உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா - பிரான்ஸ் இடையே இறுதிப்போட்டி நடந்தேறிய லுசைல் மைதானம்
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய மெஸ்ஸி
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பிரான்சுக்கு கிடைத்த முதல் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி, அணிக்கு நம்பிக்கையூட்டிய கிலியன் எம்பாப்பே.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடுத்த 97 விநாடிகளிலேயே அபாரமாக இரண்டாவது கோலை அடித்து பிரான்ஸ் ரசிகர்களை மகிழ்வித்த கிலியன் எம்பாப்பே.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினாவுக்கு மூன்றாவது கோலை அடித்தார் மெஸ்ஸி. அதைத் தடுக்க பிரான்ஸ் வீரர் ஜூலஸ் கோன்டே மேற்கொண்ட கடைசி நேர முயற்சி தோல்வியில் முடிந்தது.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறுதிக்கட்டத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கி 3-3 என்ற கணக்கில் ஆட்டத்தை மீண்டும் சமனாக்கினார் கிலியன் எம்பாப்பே.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடந்த 56 ஆண்டுகளில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் கிலியன் எம்பாப்பே.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸ் வீரர் கிங்ஸ்லி கோமன் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் அபாரமாக பாய்ந்து தடுத்த காட்சி.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்சுக்கான மூன்றாவது வாய்ப்பில் ஆரேலியன் சூயிமென்னி அடித்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியே சென்ற காட்சி.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினாவுக்கான நான்காவது வாய்ப்பை கோலாக்கி அணியின் வெற்றியை உறுதி செய்த கொன்சாலோ மோன்டியெல்.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கான கோலை அடித்ததும் உணர்ச்சிப் பெருக்கில் முகத்தை மூடிக் கொண்ட கொன்சாலோ மோன்டியெல்.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொடர் நாயகனுக்கான கோல்டன் பால் விருதை பெற்றாலும், வாழ்க்கையின் ஒரே தாகமான உலகக்கோப்பையை முத்தமிடும் மெஸ்ஸி
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1978, 1986-க்குப் பிறகு மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்ற களிப்பில் அர்ஜெண்டினா வீரர்கள்.
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கால்பந்து வாழ்க்கையின் கனவு நனவான மகிழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: