You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை அமைச்சரவை: ராஜபக்ஷ குடும்பத்தினர் 5 பேருக்கு அமைச்சர் பதவி
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவையில், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.
புதிய நியமனத்திபடி, பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டாபய தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். அமைச்சுப்பொறுப்பில் மஹிந்த ராஜபக்ஷ, - நாமல் ராஜபக்ஷ (மஹிந்தவின் மகன்), சமல் ராஜபக்ஷ (மஹிந்தவின் சகோதரர்), சசிந்திர ராஜபக்ஷ (சமல் ராஜபக்ஷவின் மகன் - ராஜாங்க அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவைதவிர, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க (நாடாளுமன்ற உறுப்பினர்) இன்று மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையின் அரசியலமைப்பின்படி (19ஆவது திருத்தம்) ஜனாதிபதியொருவர் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் தன்வசம் வைத்திருக்க முடியாது.ஆனால், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மேற்கொண்ட ஜனாதிபதி என்கிற வகையில், முன்னைாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சுப் பதவிகளை வைத்திருக்க அரசியலமைப்பின் மூலம் அனுமதிக்கப்பட்டார். அவ்வாறான நிலையில், இன்று பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்துக் கொண்டு பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த செயல்பாடு, அரசியலமைப்புக்கு முரணான விடயம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
பிற செய்திகள்:
- பாஜக வி.பி. துரைசாமியின் சர்ச்சை பேட்டி: அதிமுக-பாஜக உறவு தொடருமா?
- ப.சிங்காரம்: ‘போரும், வாழ்வும்’ - கடல் தாண்டிய தமிழ்ச் சமூகத்தின் பெரும் கலைஞன் #தமிழர்_பெருமை
- கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண் - யார் இவர்?
- இலங்கை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஏற்றது: யார் யாருக்கு என்ன துறை? முழு விவரம்
- பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: விளக்கத்தை விரிவுபடுத்திய உச்சநீதிமன்றம்
- திருச்சி போதைப்பொருள் கடத்தல்: பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: