You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஏற்றது: யார் யாருக்கு என்ன துறை? முழு விவரம்
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கினார்.
கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.
முதலில் 23 நிர்வாக மாவட்டங்களுக்கான இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
அதன்பின்னர், இன்றைய தினம் பதவி பிரமாணம் செய்துகொள்ளும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டாக தமது பதவி பிரமாணத்தை செய்தனர்.
பதவி பிரமாணத்தின் பின்னர் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.
மாவட்ட இணைப்புக்குழு தலைவர்கள் நியமனம்
01. பிரதீப் உதுகொட - கொழும்பு
02. சமன் பிரதீப் விதான - கம்பஹா மாவட்டம்
03. சஞ்சீவ எதிரிமான்ன - களுத்துறை
04. வசந்த யாப்பா பண்டார - கண்டி
05. எஸ்.நாமக்க பண்டார - மாத்தளை
06. எஸ்.பி.திசாநாயக்க - நுவரெலியா
07. சம்பத் அத்துகோரள - காலி
08. நிபுண ரணவக்க - மாத்தறை
09. உபுல் கலப்பத்தி - ஹம்பாந்தோட்டை
10. அங்கஜன் இராமநாதன் - யாழ்ப்பாணம்
11. டக்ளஸ் தேவாநந்தா - கிளிநொச்சி
12. கே.திலீபன் - வவுனியா
13. காதர் மஸ்தான் - மன்னார் மற்றும் முல்லைத்தீவு
14. டி.வீரசிங்க - அம்பாறை
15. கபில அத்துகோரள - திருகோணமலை
16. குணபால ரத்னசேகர - குருநாகல்
17. அசோக பிரியந்த - புத்தளம்
18. எச்.நந்தசேன - அநுராதபுரம்
19. அமரகீர்த்தி அத்துகோரள - பொலன்னறுவை
20. சுதர்ஷன தெனிபிட்டிய - பதுளை
21. குமாரசிறி ரத்நாயக்க - மொனராகலை
22. அகில எல்லாவல - இரத்தினபுரி
23. ராஜிகா விக்ரமசிங்க - கேகாலை
இராஜாங்க அமைச்சர்கள்
01. சமல் ராஜபக்ஷ - உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்.
02. பிரியங்கர ஜயரத்ன - வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைத்துவம்
03. துமிந்த திசாநாயக்க - சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் உற்பத்தி.
04. தயாசிறி ஜயசேகர - பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி.
05. நிமல் லன்சா - கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள்.
06. ரொஷான் ரணசிங்க - காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி
07. சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே - சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் மறுவாழ்வு.
08. அருந்திக்க பெர்னாண்டோ - தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தும்.
09. லசந்த அழகியவன்ன - சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு.
10. ஜயந்த சமரவீர - கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை.
11. ரொஷான் ரணசிங்க - காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி.
12. கனக ஹேரத் - கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு.
13. விதுர விக்ரமநாயக்க - தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள்.
14. ஜானுக்க வக்கும்புர - கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு.
15. விஜித்த பேருகொட - அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழகம்.
16. ஷெஹான் சேமசிங்க - சமுர்த்தி, வதிவிட பொருளாதாரம், நுண் நிதியம், சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி.
17. மொஹான் டி சில்வா - உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை.
18. லொஹான் ரத்வத்த - தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில்
19. திலும் அமுனுகம - வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில்
20. விமலவீர திசாநாயக்க - வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்.
21. தாரக்க பாலசூரிய - பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள்.
22. இந்திக்க அனுருத்த - கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டிட பொருள் தொழில் ஊக்குவிப்பு.
23. கஞ்சன விஜேசேகர - அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி.
24. சனத் நிஷாந்த - கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி.
25. சிறிபால கம்லத் - மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள், குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள்.
26. சரத் வீரசேகர - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.
27. அனுராத ஜயரத்ன - கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி.
28. சதாசிவம் வியாழேந்திரன் - தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி.
29. தேனுக விதானகமகே - கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு.
30. சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் - சிசிர ஜயகொடி
31. பியல் நிஷாந்த டி சில்வா - மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள்.
32. டி.பி. ஹேரத் - கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்.
33. பிரசன்ன ரணவீர - பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு.
34. டி.பி.சானக்க - விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி.
35. ஜீவன் தொண்டமான் - தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்.
36. ஷஷீந்திர ராஜபக்ஷ - நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம்.
37. நாலக்க கொடஹேவா - நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல்.
38. அஜித் நிவாட் கப்ரால் - நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு.
39. சீதா அரம்பேபொல - திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம்.
40. சன்ன ஜயசுமன - மருந்து உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்
இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டதை அடுத்து, அமைச்சரவை தகுதியுள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சரவை தகுதியுள்ள அமைச்சு பதவிகள்
01. கோட்டாபய ராஜபக்ஷ - பாதுகாப்பு அமைச்சர்
02. மஹிந்த ராஜபக்ஷ - நிதி, புத்தசாசனம், மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
03. நிமல் சிறிபால டி சில்வா - தொழில்
04. தினேஷ் குணவர்தன - வெளிவிவகாரம்.
05. ஜனக்க பண்டார தென்னக்கோன் - அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றம்
06. ஜீ.எல்.பீரிஸ் - கல்வி அமைச்சர்
07. பவித்ரா வன்னியாராட்ச்சி - சுகாதார அமைச்சர்
08. சி.பி.ரத்நாயக்க - வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு
09. டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில்
10. காமினி லொக்குகே - போக்குவரத்து
11. பந்துல குணவர்தன - வர்த்தகம்
12. டளஸ் அழகபெரும - மின்சக்தி
13. கெஹெலிய ரம்புக்வெல்ல - ஊடகத்துறை
14. சமல் ராஜபக்ஷ - நீர்ப்பாசனத்துறை
15. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - நெடுஞ்சாலைகள்
16. விமல் வீரவங்ச - கைத்தொழில் துறை
17. எஸ்எம்.சந்திரசேன - காணி
18. மஹிந்த அமரவீர - சுற்றாடல் துறை
19. மஹிந்தானந்த அளுத்கமகே - கமத்தொழில்துறை
20. வாசுதேவ நாணயக்கார - நீர்வழங்கல்துறை
21. உதய பிரபாத் கம்மன்பில - எரிசக்தி
22. ரமேஷ் பத்திரண - பெருந்தோட்டத்துறை
23. பிரசன்ன ரணதுங்க - சுற்றுலாத்துறை
24. ரோஹித்த அபேகுணவர்தன - துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை
25. நாமல் ராஜபக்ஷ - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை
26. அலி ஷப்ரி - நீதித்துறை
பிற செய்திகள்:
- ப.சிங்காரம்: ‘போரும், வாழ்வும்’ - கடல் தாண்டிய தமிழ்ச் சமூகத்தின் பெரும் கலைஞன் #தமிழர்_பெருமை
- கமலா ஹாரிஸ்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண் - யார் இவர்?
- ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்
- பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: விளக்கத்தை விரிவுபடுத்திய உச்சநீதிமன்றம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: