You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறை அதிகாரி
காலி - அம்பலங்கொடை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறைச்சாலை பிரதான அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை ஆறு மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பலங்கொடை - குலிகொட பகுதியில் வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் காயமடைந்த, சிறைச்சாலையின் பயிற்சி பாடசாலை பிரதான ஜெனரலாக கடமையாற்றிய 44 வயதான ருவன் திஹார ஜயரத்ன பலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இவர் குலிகொட பகுதியைச் சேர்ந்தவர்.
இலங்கையின் பிரதான சிறைச்சாலையாக வெலிகடை சிறைச்சாலை திகழ்கின்றது.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அம்பலங்கொடை போலீஸ் தலைமையகம் மற்றும் எல்பிட்டி குற்றப் புலனாய்வு பிரிவு ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்