முல்லைத்தீவில் வெடித்தது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா?

பட மூலாதாரம், Getty Images
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள தனியார் காணியொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேற்றிரவு ஏற்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த வெடிப்பு சம்பவத்தினால் உயிர் சேதங்களோ அல்லது பொருட் சேதங்களோ எதுவும் ஏற்படவில்லை என போலீஸார் கூறுகின்றனர்.
இந்த வெடிப்பின் ஒலி பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கேட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காணியை அதன் உரிமையாளர் சுத்திகரித்து, நேற்று மாலை குப்பைகளுக்கு தீ வைத்துள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியரம் சுமித் அத்தபத்து தெரிவிக்கின்றார்.
உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றே இவ்வாறு வெடித்திருக்கக்கூடும் என அவர் சந்தேகம் வெளியிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை போலீஸார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுமித் அத்தபத்து தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












