வைரலாகும் படங்கள் - இலங்கை தாக்குதல்களோடு தொடர்புடையவையா? #BBCFactCheck

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI/GETTY IMAGES
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி நியூஸ்
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளால் நிகழ்ந்த மனித சோகம் என்று தெரிவித்து கோரமான இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டுள்ளன.
பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் இந்த படங்கள் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு பார்க்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
ஆனால், பகிரப்பட்டுள்ள வைரலான படங்கள் பழையவை. இவற்றுக்கும் இலங்கை தாக்குதல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வைரலான புகைப்படங்கள்
“இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்ந்த குண்டு வெடிப்புக்களால் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன” என்ற செய்தியோடு இந்த படங்கள் பகிரப்பட்டுள்ளன.
பகிரப்பட்ட இந்த புகைப்படங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "எட்டு குண்டு வெடிப்புகளில் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்த இலங்கை மக்களுக்காக ஜெபியுங்கள்".

பட மூலாதாரம், SM Crab
இலங்கையை சேர்ந்த இந்த புகைப்படம், சமீபத்திய தாக்குதலோடு எந்த தொடர்பும் இல்லாதது.
2006ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி வடமத்திய இலங்கையிலுள்ள கெப்பிட்டிக்கொல்லாவாவில் நிகழந்த குண்டுவெடிப்பின்போது எடுக்கப்பட்டது என்று கெட்டி இமேஜ் (Getty image) சுட்டிக்காட்டுகிறது.

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI/GETTY IMAGES
ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின்படி, 2006ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி கெப்பிட்டிக்கொல்லாவாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 61 பேர் கொல்லப்பட்டனர். 2006ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அதிக ஆட்களை ஏற்றிச்சென்ற பேருந்து சக்தி வாய்ந்த கண்ணிவெடியில் சிக்கியதில் 15 குழந்தைகள் உள்பட 64 பேர் பலியாகினர். 80 பேர் பலியான இந்த தாக்குதல் தமிழீழ விடுதலை புலிகள் நடத்தியதாக கூறப்பட்டது.
"இறந்த குழந்தை"
"இலங்கையில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தாக்குதல்களில் இறந்த மிகவும் இளையவர்" என்று எழுதப்பட்டு, ஒரு குழந்தையின் சடலத்தின் மீது அழுகின்ற ஆணை காட்டுகின்ற இன்னொரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
"ஆஸ்திரேலிய காப்டிக் பாரம்பரிய மற்றும் சமூக சேவைகள்' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 3,000-க்கும் மேலாக இந்த வைரல் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
'' Abbey Roads'' எனப்படும் இன்னொரு வலைப்பூவில் பகிரப்பட்டுள்ள இதே புகைப்படம், 2019ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி "கொழும்புவின் குழந்தை மறைசாட்சி" என்று எழுதி பகிரப்பட்டுள்ளது.

Zahran Hashim சகோதரி பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

இந்த வைரல் புகைப்படம் தவறானது என்று பிபிசி உண்மை சரிபார்ப்புக் குழு கண்டறிந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற சமீபத்திய தாக்குதல்களோடு இந்த புகைப்படம் தொடர்புடையதல்ல.
இதே புகைப்படம் முன்னதாகவும் பகிரப்பட்டுள்ளது கூகுள் புகைப்பட ரிவர்ஸ் தேடலில் வெளியான முடிவு காட்டுகிறது. ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னர், 2018ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி "பட்டா வாடன்" என்கிற ஃபேஸ்புக் பயனாளர் இதே புகைப்படத்தை கீழ்காணும் செய்தியோடு பகிரப்பட்டுள்ளது.
"இந்த சோகத்தை நான் எவ்வாறு தாங்குவேன்... உலகிலுள்ள எந்தவொரு தந்தையும் இதை போன்றதொரு வலியை உணர தயவுசெய்து அனுமதிக்காதீர்கள்"

செய்தி மீளாய்வு: 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இலங்கையில் நிகழந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் பலரை ஒரேயடியாக அடக்கம் செய்வதோடு தொடர்புடைய, சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள். ஆனால், பகிரப்பட்டுள்ள வைரலான படங்கள் பழையவை. இவற்றுக்கும் இலங்கை தாக்குதல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
செய்தி தோன்றியது:
https://sharechat.com/item/j9e01Gj?referer=tagTrendingFeed
https://www.facebook.com/WomenofChristMKE/posts/2646331705389166
ஆசிரியர்: ஃபேஸ்புக் மற்றும் ஷேர்சேட்
செய்தி: தவறு.

பிற செய்திகள்:
- பள்ளிவாசல்களை தாக்க திட்டம் - இன்று தொழுகைக்கு செல்வதை தவிர்க்க இலங்கை போலீசார் எச்சரிக்கை
- ‘தனி ஒருவன்’ தினேஷ் கார்த்திக் ஆட்டம் வீண்: குழுவாக விளையாடிய ராஜஸ்தான் அணி வெற்றி
- ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: விசாரணைக்குழுவில் இரு பெண்கள்
- "புலிகளின் போராட்டத்தையும், குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












