You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை அரசியல் நெருக்கடிக்கு தீர்வு: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
இலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதை வரவேற்று, சர்வதேச நாடுகள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இலங்கையில் ஏற்பட்டிருந்த கொதிநிலை முடிவுக்கு வந்ததையடுத்து இன்று திங்கட்கிழமை, தமது வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இது தொடர்பாக வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜனநாயகத்தில் உறுதியும், அரசியலமைப்பில் இயல்பு நிலையும் ஏற்பட்டுள்ள இலங்கையின் இந்த வார அரசியல் முன்னேற்றத்தினை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் நல்ல நட்பு நாடு இலங்கை என்றும், இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் உறவினை மேம்படுத்துவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளையில், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்புக்கு இணங்க அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் தீர்வு காணப்பட்டுள்ளதை வரவேற்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் ஸ்திரமின்மைக்கு அரசியலமைப்பு ஊடாகவும், இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் ஆர்பாட்டங்கள் மூலமாகவும் தீர்வு காணப்பட்டதற்கு ஆஸ்திரேலியா தமது வரவேற்பினைத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் சமாதானத்தையும் சமரசத்தையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட தாம் எதிர்பார்ப்பதாகவும், ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- பெண்ணாக பிறந்ததை சுமையாக கருதிய சமூகத்தில் படிப்பால் சாதித்த இளம் பெண்
- ''திருடிய இளைஞர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: விவரம் இல்லை என்கிறது போலீஸ்''
- ராகுல்-ஸ்டாலின்: புதிய தலைமை, புதிய சூழலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கும்?
- அமெரிக்காவில் பார்சல் திருடர்களை பிடிக்க ஜி.பி.எஸ். கருவி: அமேசான் புதிய உத்தி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்