You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரவில் பெண் போல ஆடை அணிந்து நடமாடிய நபர் அடித்துக் கொலை
இலங்கையில் தம்புள்ள நகர பிரதேசத்தில் பெண்களைப் போல் ஆடை, அணிகலன்கள் அணிந்து இரவு வேளையில் நடமாடிய இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.
34 வயதான சனத்குமார என்ற இந்த நபரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தம்புள்ளை நகரிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் இரவு வேளையில் பெண்களை போன்று ஆடை மற்றும் அணிகலன்கள் அணிந்து நடமாடுபவர் என கூறப்படுகின்றது.
இது தொடர்பாக, ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டவர் என தம்புள்ளை போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீடகப்பட்டபோது இவர் பெண்களை போன்றே ஆடைகளை அணிந்திருந்தார் என்றும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இனந்தெரியாத நபர்களின் தாக்குலுக்குள்ளாகி இவர் கொல்லப்பட்ட இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தடி (பொல்லு) போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணங்களோ கொலையாளிகளோ இதுவரை இடம்பெற்ற ஆரம்ப விசாரணைகளில் தெரியவில்லை என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்
- ரோஹிஞ்சா மக்களை நாடு கடத்துவதாக இந்தியா மிரட்டுவது ஏன்?
- வட கொரிய அணு ஆயுத நெருக்கடி: கிம் ஜோங்-உன் "போருக்காக கெஞ்சுகிறார்"
- உ.பி.யில் தொடரும் பரிதாபம்: ஃபருக்காபாத்தில் 49 குழந்தைகள் மரணம்
- 'முதலிரவில் செக்ஸைத் தவிர வேறு நிறைய விஷயங்கள் இருந்தன'
- சர்ச்சைக்குரிய 'நீட்' கடந்து வந்த பாதை
- அரச குடும்ப அந்தஸ்தை உதறிவிட்டு காதலனுடன் சேரும் ஜப்பான் இளவரசி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்