இலங்கை: காட்டு யானைகள் நடமாட்டம் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு

காட்டு யானைகளின் பாதுகாப்புக் கருதி, ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இலங்கை வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த திட்டம் தற்போது தென் மாகாணத்தில் அமைந்துள்ள யாழ் சரணாலயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் சந்தன சூரிய பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி சிறிய ஜி.பி.எஸ். கருவி ஒன்று காட்டு யானைகளின் கழுத்தில் கட்டப்படுகிறது.

இதன் மூலம் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அப் பகுதிகளில் யானைகளுக்குத் தேவையான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஜி.பி.எஸ். மூலம் பெறும் தகவல்களைப் பயன்படுத்தி யானைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏனைய சரனாலயங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் சந்தன சூரிய பண்டார கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :