இயற்கை சீற்றத்தால் இலங்கையில் 2 லட்சம் பேர் பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை122-ஆக அதிகரித்துள்ள நிலையில் மீட்புப் பணிகளும், நிவாரண பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்தபாடில்லை. அது குறித்த புகைப்படத் தொகுப்பு.
படக்குறிப்பு, இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மற்றும் கேகாலை மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களிலே மரணங்களும் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களும் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.
படக்குறிப்பு, சப்ரகமுவ மாகாணத்தில் ரத்தினபுரி மாவட்டம் - 49 பேர் கேகாலை மாவட்டம் - 02 பேர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கேகாலை மாவட்டத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மழையுடன் கூடிய கால நிலை நீடிக்குமானால் கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அந்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் அவ்வழியாக போக்குவரத்து செய்வோர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பலியானவர்களை எடுத்து செல்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ள சவப்பெட்டிகள்