You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: புகழ் பெற்ற பாடகர், இசை அமைப்பாளர் அமரதேவா காலமானார்
இலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசை அமைப்பாளருமானடபுள்யூ.டி. அமரதேவா வியாழனன்று காலமானார். அவருக்கு வயது 88.
மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, இலங்கை தலைநகரான கொழும்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக ஒரு பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையின் இசைத்துறைக்கு ஒரு பிரத்யேக தேசிய தன்மை மற்றும் அடையாளத்தை ஏற்படுத்த அமரதேவா எடுத்த முயற்சிகளுக்காக, நோபல் பரிசின் ஆசிய பதிப்பாக கருதப்படும் ரமோன் மகசேசே விருது உள்பட பல எண்ணற்ற கௌரவங்களையும், விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
மாலத்தீவுகள் நாட்டின் தேசிய கீதத்துக்கு அமரதேவா மெல்லிசை அமைத்துள்ளார்.
பல தசப்தங்களாக இலங்கையின் பாரம்பரிய இசையின் அடையாளமாக அமரதேவா இருந்து வந்தார் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமரதேவா குறித்து விவரித்துள்ளார்.