இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: ஜடேஜா விரலில் பூசிய மர்ம திரவம் என்ன? – சர்ச்சைக்கு விளக்கமளித்த இந்திய அணி

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் நேற்று ஜடேஜா பந்து வீசுவதற்கு முன்பாகத் தனது விரலில் தடவிய பொருள் குறித்து சர்ச்சையானதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி விளக்கமளித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்களை எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இந்தப் போட்டியில், ஏழு மாதங்களுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா மீண்டும் சர்வதேச களம் கண்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாக்பூரில் நேற்று தொடங்கியது.

ஆசிய கோப்பையின்போது கால் மூட்டில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தின்போது ஜடேஜா சக வீரர் முகமது சிராஜிடம் இருந்து ஒரு பொருளைப் பெற்றுத் தனது இடது கை ஆள்காட்டி விரலில் தேய்ப்பதைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ஆஸ்திரேலியாவிலும் இதுகுறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் ட்விட்டரில் பேசுபொருளாகின.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இதுகுறித்த பேச்சு விவாதப் பொருளான நிலையில், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளதாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையதளமும் ஏ.என்.ஐ செய்தி முகமையும் தெரிவித்துள்ளன.

ஐசிசி ஆட்ட நடுவர் ஆண்டி பைக்ராஃப்டிடம் இந்திய அணியின் நிர்வாகம் இதுகுறித்து அளித்த விளக்கத்தில் ரவீந்திர ஜடேஜா, அவர் பந்து வீசும் கையில் உள்ள ஆல்காட்டி விரலில் பூசியது வலி நிவாரணி மருந்துதான் என்று தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலான அந்தக் காணொளியில் கூறப்படும் விஷயம் நடந்த நேரத்தில், ஜடேஜா ஸ்டீவன் ஸ்மித், மேட் ரென்ஷா, மார்னஸ் லாபுஷேன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்திருந்தது.

இந்த விஷயம் சமூக ஊடகங்களில் வைரலானபோதும் ஆஸ்திரேலிய அணி நடுவரின் கவனத்திற்கு இதை ஒரு பிரச்னையாகக் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இத்தகைய விஷயங்களை, ஆட்ட நடுவரால் சுயாதீனமாக எந்தவித புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட விசாரணை செய்ய முடியும்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

மேலும், பந்தின் தரம் சமரசம் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கிரிக்கெட் சட்ட நெறிமுறைகள், பந்துவீச்சாளர் தனது கைகளில் எதையேனும் பயன்படுத்துவதற்கு முன்பாக ஆட்ட நடுவரின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் எனக் கூறுவதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த விவாதங்கள் ஒருபுறமிருக்க, நேற்றைய ஆட்டத்தில் தனது பந்துவீச்சில் ஜடேஜா முத்திரை பதித்தார். நிலையாக நின்று ஆடிய லபுஷேனையும் அவருக்கு அடுத்து வந்த மேட் ரென்ஷாவையும் அடுத்தடுத்த பந்துகளில் ஜடேஜா அவுட் ஆக்கியிருந்தார். லபுஷேன் அரை சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களோடு ஜடேஜா அவுட்டாக்கினார்.

மர்ஃபி சுழலில் சிக்கிய இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் ஆக்கிய பிறகு களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தில் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் கூட்டணியில், ரோஹித் ஷர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளாசி வருகிறார்.

ராகுல் 20 ரன்களோடு அவுட் ஆகவே, அவரைத் தொடர்ந்து அஸ்வின் களமிறங்கினார். முதல் நாள் பேட்டிங்கின் இறுதியில் 77 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியில் ஒரு விக்கெட் இழப்புக்கு இவர்கள் இருவரும் களத்தில் இருந்தனர்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கியபோது, 23 ரன்களில் டாட் மர்ஃபியின் பந்தில் அஸ்வின் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாராவையும் 7 ரன்களோடு அவுட்டாக்கினார் மர்ஃபி.

இந்தியா இழந்த மூன்று விக்கெட்டுகளையுமே கைப்பற்றியது ஆஸ்திரேலியாவின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்ஃபிதான். அவர்களைத் தொடர்ந்து விராட் கோலி ரோஹித் ஷர்மாவுடன் கூட்டணி சேர களமிறங்கினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, வீசப்பட்ட முதல் ஓவரில் கோலியையும் மர்ஃபி அவுட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் போல்ட் ஆனார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, வீசப்பட்ட முதல் ஓவரில் கோலியையும் மர்ஃபி அவுட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் போல்ட் ஆனார்.

இன்று இரண்டாவது நாளாக விளையாடி வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி 64 ஓவர்களில் 182 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் ஷர்மா 171 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களை உள்ளடக்கி அபார சதம் அடித்துள்ளார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்