டி20 உலகக் கோப்பை - சூர்யகுமார் யாதவ்: 'அதிரடியில் டிவில்லியர்ஸ், ஃபிட்னஸில் கோலி'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூர்ய குமார் யாதவின் தாக்குதல் ஆட்டம் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் உலகை அவரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தனித்தன்மையான கிரிக்கெட் நுணுக்கங்களைக் கொண்டவர் என்று விமர்சகர்கள் புகழ்கிறார்கள்.
எல்லாச் சூழல்களிலும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கும் ஒரு ஆட்டக்காரர் இந்திய அணியில் இல்லை என்ற குறையைப் போக்க வந்தவர் சூர்யகுமார் யாதவ் என்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கின்றனர்.
மிஸ்டர் 360, ஸ்கை என இன்று புகழப்படும் சூர்ய குமார் யாதவுக்கு பிற நட்சத்திர வீரர்களைப் போல வாய்ப்புகள் கிடைத்துவிடவில்லை. 2010-ஆம் ஆண்டில் இருந்து ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் ஆடினாலும் தேசிய அணியில் இடம் கிடைக்க 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அவர் இந்திய அணிக்கு வந்து சேர்ந்தபோது 30 வயதைக் கடந்துவிட்டது. இந்திய டி20 அணிக்காக ஆடத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகின்றன. இன்று டி20 போட்டியில் உலகிலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அவர்தான்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஆடுகளத்தின் எல்லாத் திசைகளிலும் அடிப்பார் என்பதுதான் அவரது சிறப்பு. ஆனால் அதிவேகமாக ரன்குவிப்பது, நிலைத்து நின்று ஆடுவது போன்றவையும் அவரை சிறந்த வீரராக்கி இருக்கின்றன.
"அவர் தனித்துவமானவர்" என்று கூறுகிறார் இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். "அவர் ஃபார்மில் இருக்கும்போது பேட்டிங் செய்வதைப் பார்ப்பது சந்தேகமே இல்லாமல் மகிழ்ச்சியளிக்கக் கூடியது" என்று அவர்கூறுகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிட்னெஸில் சூர்யகுமார் யாதவை விராட் கோலியுடன் ஒப்பிடுகிறார் டிராவிட். விராட் கோலி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் எந்த அளவு பிட்னெஸை பராமரித்தாரோ அதே அளவு உடலைப் பேணுகிறார் சூர்யகுமார் என்று டிராவிட் கூறுகிறார்.
புள்ளி விவரங்களின்படி மைதானத்தின் ஃபைன் லெக் திசையில்தான் அவர் அதிக ரன்களைக் குவித்திருக்கிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அவர் அடித்த இரண்டு சிக்சர்களும் அந்தத் திசையிலேயே வந்தன.
"சூரியன் ஞாயிற்றுக்கிழமையில் மின்னியது" என்று ஜிம்பாப்வே போட்டியில் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் குறிப்பிடுகிறார்.
கிரிக்கெட் ரசிகர்கள் அவரது ஆட்டத்தை ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுகிறார்கள். அதை சூர்யகுமார் யாதவ் அப்படியே ஏற்கவில்லை. "உலகில் ஒரே 360 டிகிரி ஆட்டக்காரர்தான். நான் அவரைப் போல ஆவதற்கு முயற்சிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்து தொடர்பாக டிவிட்டரில் சூர்யகுமார் யாதவுக்கு பதில் அளித்திருக்கும் ஏபி டி வில்லியர்ஸ், "நீங்கள் வெகு விரைவிலேயே அங்கு வந்துகொண்டிருக்கிறீர்கள். இன்று சிறப்பாக ஆடினீர்கள்" என்று கூறியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரராக விளங்கிய டி வில்லியர்ஸ் கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
சுழற்பந்து வீச்சிலும், மெதுவான பந்துகளையும் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் செய்யும் பலர் இருக்கிறார்கள். ஆனால் வேகப் பந்துவீச்சையும் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ரன்களைக் குவிப்பவர் சூர்யகுமார் யாதவ் என்று இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஜிம்பாப்வேயின் என்கார்வாவின் ஓவரில் அடித்த சிக்சர்கள் பற்றிக் குறிப்பிடும் அஷ்வின், "அதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை" என்கிறார்.
ஜிம்பாப்வே போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா, "அவருடைய ஆட்டம் எதிர்முனையில் இருக்கும் மற்றொரு பேட்ஸ்மேனுக்கு நேரம் கிடைக்கிறது" என்றார்.
ஜிம்பாப்வே போட்டியில் சூர்யகுமார் யாதவ் இப்படியொரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்காவிட்டால் இந்திய அணி 140-150 ரன்களை எடுப்பதற்கே திணறி இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் சூர்ய குமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலிக்கு பிறகு அதிக ரன்களைக் குவித்திருப்பவர் இவர்தான். ஒரே ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்திருக்கிறது.
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் என்ன நடந்தது?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப்-2 கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயும் இந்தியாவும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்தப் போட்டியிலும் தொடக்க வீரர்கள் நீடிக்கவில்லை என்றாலும் 50 ரன்களைக் கடந்து ஆறுதல் அளித்து. ரோஹித் 15, கோலி 26 ரன்களில் வெளியேற கே.எல்.ராகுல், சூர்யகுமார் இருவரும் நிலைத்து நின்றனர். கே.எல்.ராகுல் அரைச்சதம் அடித்தார்.
டெத் ஓவர்ஸ் எனப்படும் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
187 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே 115 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்பிருக்கிறதா?
தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்துடன் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியதால், இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிப் போட்டியில் நுழைந்துவிட்டது. இப்போது ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதே போல வங்கதேசத்தை வென்று பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது. முதல் அரையிறுதிப் போட்டி வரும் புதன்கிழமை நடக்கிறது. இதில் நியூஸிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. வியாழக்கிழமை நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் - இங்கிலாந்தும் மோதுகின்றன.
இவ்விரு போட்டிகளிலும் இந்தியாவும், பாகிஸ்தானும் வெல்லும்பட்சத்தில், அவை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும்.

பிபிசி தமிழில் வெளியான சில சுவாரஸ்யமான கட்டுரைகள்
பெண்களைத் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்படும் கன்னித்திரை பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக் கதைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும்
மனிதர்கள் இறப்பது ஏன்?
சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.
மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?
இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர். பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். இதுபற்றிய சுவாரஸ்யமான கட்டுரை.
அதிசயக் கிணறு; தோண்டத் தோண்ட மர்மம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர். இந்தக் கிணறு பற்றித் தெரிந்து கொள்ள
மனிதர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்?
மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவை என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள
உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?
ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













