செஸ் ஒலிம்பியாட்: கோலாகலமாக நடந்த நிறைவு விழா - எந்த இடத்தில் இந்திய அணி?

செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 நிறைவு விழாவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த யுக்ரேன் (நடுவில்), ஜார்ஜியா (இடது), இந்தியா (வலது) சதுரங்க மகளிர் அணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச்சும் பாராட்டினர்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை முதல் முறையாக நடத்திய பிறகு, ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் அதன் நிறைவு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய ஃபிடே துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவின் தொடக்கமாக டிரம்ஸ் மணியின் சிலிர்ப்பூட்டிய மின்னணு டிரம்ஸ், இசை கலைஞர் ராஜேஷ் வைத்தியாவின் வீணை, கீ போர்டு கலைஞர் ஸ்டீஃபன் தேவசி, புல்லாங்குழல் இசைக்கலைஞர் நவீன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. டிரம்ஸ் மணி தனக்கே உரிய பாணியில் டிரம்ஸ் வாசித்தபடி முதல்வர் இருந்த பகுதிக்கு வந்து அவரையும் டிரம்ஸ் வாசிக்க ஊக்கப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட வரலாறை பறைசாற்றும் ஒலி-ஒளி காட்சிகள், கமலின் குரலில் சமூக நீதி வரலாறு குறித்த நிகழ்த்துக் கலை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

"உங்களுக்காக இங்கே அண்ணன் இருக்கிறேன்"

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சென்னையில் தங்கியிருந்த நாட்களை வெளிநாட்டு வீரர்கள் மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன். தமிழகத்தின் கலாசாரம், வரலாறு, குறிப்பாக உணவு ஆகியவற்றை ரசித்திருப்பார்கள் என நம்புகிறேன். வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர். செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. ஒலிம்பிக் பதங்களை வெல்லும் வகையில் வீரர்களை உருவாக்கும் பொருட்டு ரூ.25 கோடி மதிப்பில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

கபடி மற்றும் சிலம்பத்திற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்பட உள்ளது. சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தவுள்ளோம். விளையாட்டுத்துறை முன்னிலும் அதிக பாய்ச்சலுடன் செயல்படும், எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம்.

செஸ் விளையாட்டுப் போட்டி அதற்குள் முடிந்துவிட்டதா என ஏங்கும் வகையில் போட்டி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே, தமிழ்நாட்டுக்கு நீங்கள் எப்போதும் வரலாம். சென்னையை மறந்துவிட வேண்டாம். உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள்," என்று கூறினார்.

முன்னதாக, இந்த போட்டியின் தொடக்க விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார். அதுவும் நேரு உள்விளையாட்டு அரங்கிலேயே நடைபெற்றது.

வீரர்களுக்கு பதக்கம்

இன்றைய நிறைவு விழாவில் தனி நபர் பிரிவில் குகேஷ், நிஹால் சரினுக்கு தங்கம், அர்ஜுன் எரிகாசிக்கு வெள்ளி, பிரக்ஞானந்தாவுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோல, வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையிலான இந்த போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் ரிசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 'பி' அணி ஓபன் பிரிவில் வெண்கல பதக்கத்தை பெற்றது. இந்தியா 'பி' அணி தனது இறுதிச் சுற்றில் ஜெர்மனியை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி 3வது இடத்தைப் பிடித்தது.

செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான மானுவல் ஆரோனுக்கு நினைவுப்பரிசு வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பதக்கம் வென்ற நிஹால் சரின் அளித்த பேட்டியில், "ஆட்டத்திற்குப் பிறகு நாங்கள் நேற்று விஸ்வநாதன் ஆனந்தை சந்தித்தோம், அவர் எங்களை உற்சாகப்படுத்தினார். போட்டியில் முடிவு என்பது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். இது இயல்பானது. கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காமல் நீங்கள் முன்னேற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அவரது பேச்சு எங்கள் மன உறுதிக்கு மிகவும் உதவியது," என்று கூறினார்.

செஸ் ஒலிம்பியாட்
படக்குறிப்பு, நிஹால் சரின், இந்திய வீரர்

ஆச்சரியம் கொடுத்த உஸ்பெகிஸ்தான்

இறுதிச் சுற்றில் ஸ்பெயினை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்திய பலம் வாய்ந்த ஆர்மேனிய அணிக்கு முன்னால் இருந்த நெதர்லாந்தை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தியா 'ஏ' மகளிர் அணி, 11வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து தங்கப்பதக்க நம்பிக்கையை தகர்த்தது. இந்தியாவின் கோனேரு ஹம்பி தலைமையிலான அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

ரஷ்ய போரினால் பாதிக்கப்பட்ட யுக்ரேன் மகளிர் அணி போட்டியில் தங்கத்தை வென்று உணர்ச்சிமயமானது. ஜார்ஜியா அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

உஸ்பெக் வெற்றி

பட மூலாதாரம், @FIDE_chess

படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அணிக்கு தங்கம் வென்று தந்த ஜக்கோங்கிர் வாகிடோவ் உஸ்பெகிஸ்தான் அணியின் நாயகனாக திகழ்ந்தார்.

ஜக்கோங்கிர் வாகிடோவின் வெற்றியின் காரணமாக இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தான் நெதர்லாந்தை தோற்கடித்தது. அவர்கள் சிறந்த டை-பிரேக் ஸ்கோரின் அடிப்படையில் ஆர்மேனியாவை வீழ்த்தினர். உஸ்பெக்ஸ் 11 சுற்றுகளில் ஆட்டமிழக்காமல் 19 மேட்ச் புள்ளிகளுடன் முடிந்தது.

செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம், @FIDE_chess

ஜக்கோங்கிர் வாகிடோவின் வெற்றியின் காரணமாக இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தான் நெதர்லாந்தை தோற்கடித்தது. டை-பிரேக் ஸ்கோரின் அடிப்படையில் ஆர்மேனியாவை உஸ்பெகிஸ்தான் முந்தியது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

உஸ்பெக்ஸ் வீரர்கள், 11 சுற்றுகளில் ஆட்டமிழக்காமல் 19 மேட்ச் புள்ளிகளுடன் ஆட்டத்தை நிறைவு செய்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

மூன்றாமிடத்தில் இந்திய அணி, 2 வெண்கல பதக்கம்

இந்தியா 'பி' அணி 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2014ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் பதிப்பில் நிகழ்த்திய சாதனையை இந்தியா இப்போதும் பிரதிபலித்து வெண்கல பதக்கம் பெற்றுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம், @FIDE_chess

படக்குறிப்பு, முதலிடத்தில் உள்ள இந்தியா 'ஏ' மகளிர் அணி, 11வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து தங்கப்பதக்க நம்பிக்கையை தகர்த்தது.

2014ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்த அனுபவம் வாய்ந்த பி. அதிபன் இருந்தார். போட்டியின் போது அற்புதமான ஃபார்மில் இருந்த இளம் நட்சத்திரங்களான டி குகேஷ், ஆர் பிரக்ஞானந்தா, நிஹால் சரின் மற்றும் ரவுனக் சத்வானி ஆகியோருக்கு இது செஸ் ஒலிம்பியாட்டில் முதல் பதக்க அனுபவமாகும்.

மகளிர் பிரிவில், முன்னணி வீராங்கனைகள் கோனேரு ஹம்பி, ஆர் வைஷாலி ஆகியோர் முறையே குல்ருக்பா டோகிர்ஜோனோவா, இரினா க்ருஷ் ஆகியோருக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தனர்.

தானியா சச்தேவ் கரிசா யிப் மற்றும் பக்தி குல்கர்னியிடம் ததேவ் ஆபிரகாம்யானிடம் தோல்வியடைந்தது, இந்தியா 'ஏ' அணியின் தங்கப் பதக்க வாய்ப்பைப் பாதித்தது.

YouTube பதிவை கடந்து செல்ல, 3
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 3

முடிவுகள்:

ஓபன்:இந்திய அணி போட்டிகள்: இந்தியா 'பி' ஜெர்மனியை 3-1 என்ற கணக்கில் வென்றது (டி குகேஷ் வின்சென்ட் கீமருடன் டிரா, நிஹால் சரின் மத்தியாஸ் புளூபாம், ஆர் பிரக்ஞானந்தா ராஸ்மஸ் ஸ்வானுடன் டிரா, ரவுனக் சத்வானி லிவியு-டைட்டர் நிஸ்பேனுவை வீழ்த்தினார்).

இந்தியா 'ஏ' அணி அமெரிக்காவுடன் 2-2 என டிரா செய்தது (பி ஹரிகிருஷ்ணா ஃபேபியானோ கருவானாவுடன் டிரா, விடித் சந்தோஷ் குஜ்ராத்தி வெஸ்லி சோ, அர்ஜுன் எரிகைசி லினியர் டொமினிகஸ் பெரெஸ், எஸ்.எல். நாராயணன் சாம் ஷாங்க்லாந்திடம் தோல்வியடைந்தார்).

இந்தியா 'சி' கஜகஸ்தானை 2-2 என்ற புள்ளிகள் கணக்கில் டிரா செய்தது (சூர்யா சேகர் கங்குலி ரினாட் ஜுமாபயேவிடம் தோல்வி, எஸ்.பி. சேதுராமன் அலிஷர் சுலேமெனோவுடன் டிரா, கார்த்திகேயன் முரளி ஆரிஸ்டான்பெக் உராசாயேவை வீழ்த்தினர், அபிமன்யு பூராணிக் காசிபெக் நோஜர்பெக்குடன் டிரா செய்தார்).

செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம், @FIDE_chess

மகளிர் அணி: இந்தியா 'ஏ' 1-3 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது (கோனேரு ஹம்பி குல்ருக்பா டோகிர்ஜோனோவாவுடன் டிரா, ஆர் வைஷாலி இரினா க்ருஷ்ஷிடம் டிரா, டானியா சச்தேவ் கரிசா யிப்பிடம் தோற்றார், பக்தி குல்கர்னி ததேவ் ஆபிரகாம்யானிடம் தோல்வியடைந்தார்).

இந்தியா 'சி' கஜகஸ்தானிடம் 1.5-2/5 என்ற கணக்கில் தோற்றது (ஈஷா கரவாடே ஜான்சயா அப்துமாலிக்கிடம் தோல்வியடைந்தார், பிவி நந்திதா பிபிசரா அஸ்ஸௌபயேவாவிடம் தோல்வியடைந்தார், வர்ஷினி சாஹிதி செனியா பாலபயேவாவிடம் டிரா செய்தார், பிரத்யுஷா போடா குலிஸ்கான் நக்பயேவாவிடம் தோல்வியடைந்தார்).

இந்தியா 'பி' அணி ஸ்லோவாக்கியாவுடன் 2-2 என டிரா செய்தது (வந்திகா அகர்வால் ஜூசானா போரோசோவாவுடன் டிரா, பத்மினி ரௌட் இவா ரெப்கோவாவிடம் தோல்வியடைந்தார், மேரி ஆன் கோம்ஸ் எதிராக ஜூசானா ஹகரோவா, திவ்யா தேஷ்முக் ஸ்வெட்லானா சுசிகோவாவை வீழ்த்தினார்).

பிற முக்கிய முடிவுகள்: ஓபன்: ஆர்மீனியா ஸ்பெயினை 2.5-1.5 என்ற கணக்கில் வென்றது, உஸ்பெகிஸ்தான் நெதர்லாந்தை வென்றது.

முக்கிய அம்சங்கள்

  • மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எண்ணிக்கையில் நாடுகள் பங்கேற்றன.
  • 187 நாடுகளில் இருந்து ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் கிட்டத்தட்ட 350 அணிகள் களமிறங்கின. இதில், ஓபன் பிரிவில் 188 அணிகள், மகளிர் பிரிவில் 162 அணிகள் இடம் பெற்றன.
  • 2018இல் நடந்த படுமி ஒலிம்பியாட் போட்டியில் 179 நாடுகளில் இருந்து முறையே ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் 184 மற்றும் 150 அணிகள் கலந்து கொண்டன.
  • இந்தியாவின் 30 பேர் கொண்ட அணிதான் மிகப்பெரிய அணியாக விளங்கியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: