ISWOTY: விடுபட்ட இந்திய விளையாட்டு வீராங்கனைகளை விக்கிப்பீடியாவில் இடம் பெறச் செய்தல்

அதிக தகவல் கிடைக்கப் பெறாத அல்லது விக்கிப்பீடியாவில் இடம் பெறாதிருந்த, பாராட்டுக்குரிய மற்றும் வளரும் இந்திய விளையாட்டு வீராங்கனைகள் 50 பேரின் விவரங்களை விக்கிப்பீடியாவில் ஆறு இந்திய மொழிகளில் சேர்க்க மாணவர்களுடன் இணைந்து பிபிசி பணியாற்றியது.

அவர்கள் சர்வதேச பதக்கங்களை வென்றவர்கள், தேசிய சாதனை படைத்தவர்கள், டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றவர்கள், ஆனால் விக்கிப்பீடியாவில் குறைந்த அளவு பிரபலமானவர்கள் அல்லது தகவல் இடம் பெறாத நிலையில் உள்ளவர்களாக இருந்தனர். இனி அந்த நிலை கிடையாது. பல மாதங்கள் ஆய்வு மற்றும் பிபிசியின் முதன்மை நேர்காணல்களுக்குப் பிறகு, 50 இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயணம் பற்றிய தகவல்கள் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்பட்டன.

இதில் பெரும்பாலான இந்திய விளையாட்டு வீராங்கனைகளைப் பற்றிய தகவல்கள் விக்கிபீடியாவில் இந்திய மொழிகளில் இல்லை என்பதை பிபிசி கண்டறிந்தது. பொது வாழ்வில் பிரபலமானவர்கள் பற்றிய தகவல்களை அறிவதற்கான பிரபலமான இணையதளமாக விக்கிபீடியா உள்ளது.

இந்த 50 விளையாட்டு வீராங்கனைகள் எப்படி தேர்வு செய்யப்பட்டனர்?

நாடு முழுக்க விளையாட்டு செய்தியாளர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் 40-க்கும் மேற்பட்ட நெறியாளர்களின் உதவியுடன் இந்த 50 இந்திய விளையாட்டு வீராங்கனைகளை பிபிசி அடையாளம் கண்டது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில், நெறியாளர்கள் தங்கள் பரிந்துரைகளை அளித்தனர். பெயரின் ஆங்கில முதல் எழுத்து வரிசைப்படி விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: