ஐபிஎல் 2020: ஏ பி டி வில்லியர்ஸ் "கிரிக்கெட் உலகின் சூப்பர் நாயகன்"

பட மூலாதாரம், BCCI IPL
"சூப்பர் மனிதன்" என்ற பட்டம், ஏ பி டி வில்லியர்ஸுக்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லியால் வழங்கப்பட்டிருக்கிறது.
அதுபோலவே 360 டிகிரி கோணத்தில் சுழன்று மட்டையை சுழற்றும் அவரது திறனால் அவரை சூப்பர் நாயகன் என்றும் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.
இதற்கு ஒரு சிறப்புக் காரணமும் உண்டு. திங்கட்கிழமை நடந்த போட்டியில் ஆறு சிக்சர்களை தனது மட்டையால் விளாசியிருக்கிறார் வில்லியர்ஸ். சிக்சர்களுடன் நிற்காமல் நான்கு அனல் பறக்கும் ஃபோர்களையும் அடித்து 33 பந்துகளில் 73 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் இருந்தார்.
20 ஓவர்களில் 194 ரன்கள் ஆர்சிபி அணி குவித்தது.
வில்லியர்ஸின் வாள் வீச்சு போல அமைந்த மட்டையைச் சுழற்றும் அபார திறனை வியந்துதான் விராட் கோஹ்லி அவருக்கு வேறு பெயர் சூட்ட முடியாமல் சூப்பர் மனிதன் என்று பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார்.
ஏ பி டி வில்லியர்ஸின் இந்தத் திறமைக்கு காரணம் அவரது தனிச்சிறப்புகள்.
உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார், 35 வயதாகும் ஏ பி டி வில்லியர்ஸ். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி இவரது சராசரி 50 ரன்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
வலது கை பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸை மிஸ்டர் 360 டிகிரி என கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். தான் விளையாடிய காலகட்டத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களாக கருதப்பட்ட வீரர்களின் பந்துகளை மிக லாவகமாக சிக்ஸர்கள் விரட்டியவர். எந்த பக்கத்தில் இருந்து பந்து வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலை சர்வ சாதாரணமாக கையாளுவார்.

பட மூலாதாரம், BCCI IPL
ஆனால், திங்கட்கிழமை ஆட்டத்தில் இந்த ஆற்றலுக்கு மெரூகூட்டுவது போல, தனது மட்டையால் ரன் மழைகளை குவித்து சக போட்டியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் வில்லியர்ஸ்.
ஷார்ஜா மைதானத்தை பொறுத்தவரை, எப்போதுமே அது பந்து அடிக்க வாய்ப்பானதாக இருக்காது என்று பெரும்பாலான பிரபல நட்சத்திரங்கள் கொண்டுள்ள எண்ணம். கோஹ்லி, ஆரோன் ஃபிஞ்ச், மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் தங்களுடைய ஆடும் திறனை நிரூபிக்க எப்போதுமே இந்த மைதானத்தில் போராடியதாகக் குறிப்பிடுவர். ஆனால், இந்த எண்ணத்தை பொய்யாக்கியிருக்கிறார் டி வில்லியர்ஸ்.
அது சரி... அப்படி என்ன சாதனையை அவர் நிகழ்த்தினார் என்கிறீர்களா?

பட மூலாதாரம், BCCI IPL
6 சிக்ஸர், 4 ஃபோர்கள் எப்படி முடிந்தது?
ஷார்ஷா கிரிக்கெட் மையானத்தில் ஆடுவது எவ்வளவு கடினமானது என்பதை, ஏழு ஓவர்களில் நான்கு பந்துகளை மட்டுமே வில்லியர்ஸ் இணையின்போது கோஹ்லியால் எதிர்கொள்ள முடிந்தது.
களத்துக்கு வந்த டி வில்லியர்ஸ், கோலியுடன் சேர்ந்து நிதானமாக ஆடி, ஷாட்களை மிஸ் செய்து விடாமல், அணியின் ஸ்கோரை அதிகரித்தனர். கொல்கத்தாவின் பெளலிங்கை விளாசிய டி வில்லியர்ஸ் எளிதில் அரை சதம் கடந்தார்.
11 முறை அவர் பவுண்டரிகளுக்கு பந்தை அடித்தார். ஆறு முறை பவுண்டரியை தொடாதவாறு விளாசிய வில்லியர்ஸ், ஐந்து முறை தன்னை நோக்கி வந்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். அந்த அளவுக்கு இவரைப் போலவே இவரது மட்டையும் ஐபிஎல் 2020: ஏ பி டி வில்லியர்ஸ் "கிரிக்கெட் உலகின் சூப்பர் நாயகன்"உறுதியுடன் காணப்பட்டது.
20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது பெங்களூரு. கோலி 28 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 33 ரன்களும், டி வில்லியர்ஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 73 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்டத்தின் முடிவில் பேசிய விராட் கோஹ்லி, "டி வில்லியர்ஸின் திறமை உண்மையிலேயே அற்புதமானது. ஓரளவுக்காவது என்னால் பந்தை அடிக்க முடிந்ததே என்ற உணர்வுதான் எனக்கு வந்தது. ஆனால், ஏ பி வந்ததும் ஆட்டம் சூடுபிடித்தது. 160-165 ரன்கள் எடுக்கலாம் என உத்தேசித்த நிலையில், எங்களுடைய ஜீனியஸ் (டி வில்லியர்ஸ்) 194 ரன்கள் எடுக்க உதவினார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மற்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து கூறும்போது, அவரும் டி வில்லியர்ஸை ஜீனியஸ் என்றே வியந்து பாராட்டினார்.
கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் வில்லியர்ஸின் ஆட்டத்திறமையை வியந்து பார்த்ததாகவும் அவரை எவராளும் தடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
"ஏ பி உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் பந்தை விளாசத் தொடங்கி விட்டால் நிறுத்துவது எளிதான காரியம் அல்ல. அவர் வித்தியாசமாக தனது திறமையை வெளிப்படுத்தினார். அவரது விக்கெட்டை வீழ்த்த பல உத்திகளை நாங்கள் கடைப்பிடித்தாலும் எங்களுடைய ஊகம் தவறாகிப் போய் பந்து பவுண்டரிகளை நோக்கியே சென்றது" என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
வயோதிகத்தை பின்னுக்குத் தள்ளிய திறமை
பொதுவாகவே, கிரிக்கெட் வீரர்கள் 35 வயதை கடக்கும்போது அவர்களின் ஆட்டத்திலும் ஒருவித சோர்வு ஏற்படுவதை பார்க்க முடியும். ஆனால், வில்லியர்ஸுக்கு வயது ஒரு தடையாகவே இருக்கவில்லை என்பதை அவரது உடல் சுறுசுறுப்பும் சாதுர்யமும் நிரூபித்து வருகின்றன. அவரது வயதில் பல வீரர்கள் டி-20 ஆட்டத்திலேயே ஆடுவதற்கு போராடினார்கள்.
ஆனால், வில்லியர்ஸ், ஐபிஎல்-13ல் இரண்டாவது முறையாக அவர் ஆட்ட நாயகனாக விளங்கினார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளில் 55 ரன்களை எடுக்க அவரால் மட்டுமே முடிந்தது. இத்தனைக்கும் அந்த மைதானம்ஐபிஎல் 2020: ஏ பி டி வில்லியர்ஸ் "கிரிக்கெட் உலகின் சூப்பர் நாயகன்"மிகவும் சிக்கலானதாக இருந்தது என்று முன்னணி வீரர்கள் பலரும் கூறினார்கள்
மீண்டும் கார்த்திக்கு இறங்குமுகம்

பட மூலாதாரம், BCCI IPL
கிங்ஸ் லெவன் அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினாலும், பெங்களூரு அணியை எதிர்கொண்டபோது பேட்டிங், பெளலிங் இரண்டிலும் அவரால் சிறப்பாக பரிணமிக்க முடியவில்லை.
அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அவரது பரிசோதனை முயற்சி, அணியின் கூட்டு திட்டமிடலுக்கும் ரன்கள் குவிப்புக்கும் வழியேற்படுத்தாதது போலவே தோன்றியது. இம்முறை சுனில் நரைன் பெங்களூருக்கு எதிரான அணியில் இடம்பெறவில்லை. அந்த வாய்ப்பு, டாம் பென்டனுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கிடைத்த வாய்ப்பை டாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி்யுடனான ஆட்டத்தில் சிறப்பாக இன்னிங்ஸ் செய்த ராகுல் திரிபாதியை ஏழாம் இடத்துக்கு தினேஷ் கார்த்திக் மீண்டும் இடம்பெறச் செய்தார். ஆனால், அந்த பரிசோதனையும் சரியான பலனை கொடுக்கவில்லை.
பிற செய்திகள்:
- வட கொரியாவின் அச்சுறுத்தும் ஏவுகணை: அமெரிக்கா ஏன் அச்சம் கொள்ள வேண்டும்?
- குஷ்புவின் வருகை பா.ஜ.கவுக்கு உதவுமா? ஆய்வாளர்களின் பார்வை என்ன?
- நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேர் கைது
- கொரோனா: 99 ஆண்டுக்கு முந்தைய தடுப்பு மருந்து உங்களை காப்பாற்றுமா?
- சுமார் 2 மணி நேர மின் தடை: ஸ்தம்பித்த மும்பை நகரம், விசாரிக்க மகராஷ்டிர முதல்வர் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












